உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / புதுச்சேரி / கத்தியுடன் திரிந்த வாலிபர் கைது

கத்தியுடன் திரிந்த வாலிபர் கைது

புதுச்சேரி, : நுாறடிச்சாலையில் கத்தியை காட்டி மிரட்டிய நபரை போலீசார் கைது செய்தனர்.முதலியார்பேட்டை சப்இன்ஸ்பெக்டர் ரவிச்சந்திரன் தலைமையிலான போலீசார் நேற்று முன்தினம் இரவு நுாறடிச்சாலை மேம்பாலம் கீழ் பகுதியில் ரோந்து சென்றனர். அப்போது, கத்தியுடன் பொதுமக்களை மிரட்டி கொண்டிருந்த நபர் போலீசாரை கண்டதும் தப்பியோட முயற்சித்தார்.போலீசார் மடக்கி பிடித்து விசாரித்தபோது, வில்லியனுார் கோபாலன்கடை, அன்பு நகரைச் சேர்ந்த செல்வராஜ் மகன் ரவி (எ) ரவிந்திரன், 24; என தெரியவந்தது. இவர் மீது கஞ்சா மற்றும் வெடிகுண்டு வழக்கு நிலுவையில் உள்ளது. ரவியிடம் இருந்து கத்தி ஒன்றை போலீசார் பறிமுதல் செய்தனர்.கைது செய்யப்பட்ட ரவியை நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி, சிறையில் அடைத்தனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்



சமீபத்திய செய்தி