உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / புதுச்சேரி / பட்டாபிராமர் கோவிலில் ஆடிப்பூரம் விழா 

பட்டாபிராமர் கோவிலில் ஆடிப்பூரம் விழா 

பாகூர்: மதிக்கிருஷ்ணாபுரம் பட்டாபிராமர் சுவாமி கோவிலில் ஆடிப்பூரம் முன்னிட்டு ஆண்டாள் ரங்கநாக பெருமாள் சிறப்பு அலங்காரத்தில் அருள்பாலித்தனர்.பாகூர் அடுத்த மதி கிருஷ்ணாபுரம் கிராமத்தில் பழமை வாய்ந்த பட்டாபிராமர் சுவாமி கோவில் உள்ளது. இக்கோவிலில் ஆடிப்பூரம் விழா நேற்று முன்தினம் நடந்தது. இதை முன்னிட்டு காலை 7:00 மணிக்கு சிறப்பு பூஜைகள் நடந்தன.இரவு 7.00 மணி ரங்கநாத பெருமாள், ஆண்டாள் சுவாமி சிறப்பு அலங்காரத்தில் உள்புறப்பாடு நடந்தது. இதில், செந்தில்குமார் எம்.எல்.ஏ., உள்ளிட்ட திரளான பக்தர்கள் பங்கேற்று தரிசனம் செய்தனர்.பெண்களுக்கு வளையல், குங்குமம், மஞ்சள், தாலி கயிறு உள்ளிட்டவை பிரசாதமாக வழங்கப்பட்டது. ஏற்பாடுகளை கோவில் நிர்வாக அதிகாரி சின்னசாமி மற்றும் கிராம மக்கள் செய்திருந்தனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்



அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை