உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / புதுச்சேரி / மக்கள் பாதுகாப்பு பேரியக்கம் அரசு மீது குற்றச்சாட்டு

மக்கள் பாதுகாப்பு பேரியக்கம் அரசு மீது குற்றச்சாட்டு

புதுச்சேரி: போக்குவரத்து பிரச்னையில் அரசு மெத்தனமாக செயல்படுகிறது என புதுச்சேரி மக்கள் பாதுகாப்பு பேரியக்கம் குற்றம்சாட்டியுள்ளது.இயக்க தலைவர் வளவன் வெளியிட்டுள்ள அறிக்கை: மாநிலத்தில் அரசுத்துறை முழுவதும் தோல்வி அடைந்து விட்டது. சட்டம் ஒழுங்கு சீர்கெட்டு உள்ளது, சரிவர சாலை வசதிகள் இல்லாததால் போக்குவரத்து நெரிசல் ஏற்படுகிறது. இதை சீர் செய்யாமல் அரசாங்கம் மெத்தனப் போக்காக செயல்படுகிறது. மின்தடை பிரச்னை, மந்தகதியில் நடக்கும் ஸ்மார்ட் சிட்டி பணிகள், ரேஷன் கடை மூடல் அரசுக்கு எதிராக திரும்பி,இந்த தீர்ப்பை ஆளும் அரசுக்கு வழங்கி உள்ளனர். மக்கள் தீர்ப்பை ஏற்று அமைச்சர் நமச்சிவாயம் ராஜினாமா செய்ய வேண்டும்.இவ்வாறு அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்



முக்கிய வீடியோ