மேலும் செய்திகள்
பெண் தற்கொலை
9 hour(s) ago
ஹயக்ரீவர் கோவிலில் தேசிகர் உற்சவம்
9 hour(s) ago
குண்டர் தடுப்பு காவல் சட்டத்தை கோட்டை விடும் போலீஸ்
9 hour(s) ago
காரைக்காலில் அக் ஷர் ரோந்து கப்பல் அர்ப்பணிக்கும் விழா
9 hour(s) ago
புதுச்சேரி: காலப்பட்டு ஜோதி வள்ளலார் மேல்நிலைப் பள்ளி பிளஸ் 2 மற்றும் பத்தாம் வகுப்பு பொதுத்தேர்வில் சிறந்த மதிப்பெண்கள் பெற்று பள்ளிக்கு பெருமை சேர்த்துள்ளது.பிளஸ் 2 பொதுத்தேர்வில் பள்ளியளவில் மாணவி யுவஸ்ரீ 557 மதிப்பெண்கள் பெற்று முதலிடமும், மாணவர் உமேஷ் 555 பெற்று இரண்டாமிடமும், மாணவர் வெற்றிச்செல்வன் 533 மதிப்பெண்கள் பெற்று மூன்றாமிடம் பெற்றுள்ளார். மாணவி ரோஷ்மி 530 மதிப்பெண்கள் பெற்றுள்ளார். மாணவர் உமேஷ் பயலாஜி பாடத்தில் 100க்கு 100 மதிப்பெண் பெற்றுள்ளார். அனைத்து பாடங்களிலும் மாணவர்கள் 90க்கு மேல் அதிக மதிப்பெண்கள் பெற்றுள்ளனர்.பத்தாம் வகுப்பு பொதுத்தேர்வில் பள்ளியளவில் மாணவி திவ்யபாரதி 478 மதிப்பெண்கள், மாணவர்கள் சேவியர் ராபர்ட், ஜெகதீஸ்வரன் 477 மதிப்பெண்கள், மாணவி சக்திஷா 475 மதிப்பெண்கள் பெற்றுள்ளனர். 450 மதிப்பெண்களுக்கு மேல் 31மாணவர்களும், 400 மதிப்பெண்களுக்கு மேல் 20 மாணவர்களும் பெற்றுள்ளனர்.இதில் கணித பாடத்தில் 100க்கு 100 மதிப்பெண்கள் 2 மாணவர்களும், 100 க்கும் 99 மதிப்பெண்கள் 9 மாணவர்களும், மற்ற பாடங்களில் 90க்கும் மேல் அதிக மதிப்பெண்கள் பெற்றுள்ளனர். வெற்றி பெற்ற மாணவர்களை பள்ளி தாளாளர் ராமலிங்கம், பள்ளி முதல்வர் சரஸ்வதி ஆகியோர் சால்வை அணிவித்து வாழ்த்து தெரிவித்தனர்.
9 hour(s) ago
9 hour(s) ago
9 hour(s) ago
9 hour(s) ago