விளம்பரச் செய்தி: வேலைவாய்ப்பு முகாம் அறிவிப்பு பதாகை வெளியீடு
புதுச்சேரி: கலிதீர்த்தாள்குப்பம், மணக்குள விநாயகர் தொழில்நுட்பக் கல்லுாரி மற்றும் பி.என்.ஐ., புதுச்சேரி சார்பில் மெகா வேலைவாய்ப்பு முகாம் ஜூலை 11ம் தேதி கல்லுாரி வளாகத்தில் நடக்கிறது. அது தொடர்பான அறிவிப்பு பதாகை வெளியீட்டு விழா நடந்தது. மணக்குள விநாயகர் கல்வி அறக்கட்டளை தலைவர் தனசேகரன் தலைமை தாங்கினார். கல்வி அறக்கட்டளையின் பொருளாளர் ராஜராஜன், இணைச் செயலாளர் வேலாயுதம் வாழ்த்தி பேசினர். பி.என்.ஐ., புதுச்சேரி நிர்வாக இயக்குநர் இளங்கோ, மண்டல ஒருங்கிணைப்பாளர் ஆனந்த் காந்திராஜ், வேலைவாய்ப்பு முகாம் தலைவர் பகுத்தறிவு, பி.என்.ஐ. டாபோடில்ஸ் தலைவர் ஜெயசுதர்சன், துணைத் தலைவர் முகமது காசிம் ஆகியோர் வேலை வாய்ப்பு முகாம் தொடர்பான அறிவிப்பு பதாகையை வெளியிட்டனர். கல்லுாரி முதல்வர் மலர்க்கண் வரவேற்றார். வேலை வாய்ப்பு முகாமில் தகவல் தொழில்நுட்பம், உற்பத்தித் துறை, வங்கி, நிதி, விற்பனை, சேவைத் துறை உள்ளிட்ட பல்வேறு துறைகளை சேர்ந்த 100-க்கும் மேற்பட்ட முன்னணி நிறுவனங்கள் பங்கேற்க உள்ளன. காலை 9:00 முதல் மாலை 3:00 மணி வரை நடக்கும் முகாமில் பொறியியல், கலை மற்றும் அறிவியல், டிப்ளமோ, ஐ.டி.ஐ., மற்றும் பிற பட்டப்படிப்பு மாணவர்கள் கலந்து கொள்ளலாம். மேலும், பங்கேற்கும் நிறுவனங்கள், பதிவு நடைமுறைகள் மற்றும் நிகழ்ச்சி அட்டவணை தொடர்பான விவரங்கள் விரைவில் அறிவிக்கப்படும். ஏற்பாடுகளை வேலைவாய்ப்பு துறை டீன் ஜெயக்குமார் மற்றும் ஒருங்கிணைப்பாளர்கள் செய்து வருகின்றனர்.