உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / புதுச்சேரி / பஞ்சாலைகளை ஒருங்கிணைத்து ஜவுளி பூங்கா ஏ.ஐ.டி.யூ.சி., தொழிற்சங்கம் கோரிக்கை

பஞ்சாலைகளை ஒருங்கிணைத்து ஜவுளி பூங்கா ஏ.ஐ.டி.யூ.சி., தொழிற்சங்கம் கோரிக்கை

புதுச்சேரி : அமைப்புசாரா தொழிலாளர் நல வாரியத்திற்கு நிதி ஒதுக்கி செயல்பாட்டிற்கு கொண்டு வர வேண்டும் என ஏ.ஐ.டி.யூ.சி., தொழிற்சங்கம் வலியுறுத்தியுள்ளது.புதுச்சேரி ஏ.ஐ.டி.யூ.சி.,மாநில பொதுக்குழு கூட்டம் முதலியார் பேட்டை கடலூர் சாலையில் உள்ள சுப்பையா இல்லத்தில் நடந்தது. மாநில தலைவர் தினேஷ் பொன்னையா தலைமை வகித்தார். பொதுச் செயலாளர் சேதுசெல்வம் தொழிற்சங்க வேலைகளை பட்டியலிட்டார்.கூட்டத்தில், கவுரவ தலைவர் அபிஷேகம், பொருளாளர் அந்தோணி, துணைத் தலைவர்கள் முருகன், மோதிலால், சேகர், மரி கிறிஸ்டோபர், மாநில செயலாளர்கள் துரை செல்வம், முத்துராமன், பாஸ்கர், செந்தில்முருகன்,பொது குழு உறுப்பினர்கள் கலந்து கொண்டனர்.கூட்டத்தில், அமைப்புசாரா தொழிலாளர் நல வாரியத்தை செயல்படுத்துவதற்கு போதுமான நிதி ஒதுக்கி நல வாரியத்தை செயல்பாட்டுக்கு கொண்டு வர வேண்டும். மூன்று பஞ்சாலைகளை ஒருங்கிணைத்து ஜவுளி பூங்கா அமைக்க வேண்டும்.நிலுவை சம்பளம் வழங்கி நிறுவனங்களை மீண்டும் செயல்பாட்டுக்கு கொண்டும். ஊதியத்தை உயர்த்தி குறைந்தபட்ச ஊதியம் நிர்ணயம் செய்ய வேண்டும். தொழிலாளர் துறையில் உள்ள காலி பணியிடங்களை உடனடியாக நிரப்ப வேண்டும் உள்ளிட்ட தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

புதிய வீடியோ