உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / புதுச்சேரி / பாகூர் மூலநாதர் கோவிலில் இன்று அக்னி நட்சத்திரம் நிவர்த்தி பூஜை

பாகூர் மூலநாதர் கோவிலில் இன்று அக்னி நட்சத்திரம் நிவர்த்தி பூஜை

பாகூர், : அக்னி நட்சத்திரம் நிறைவையொட்டி, பாகூர் மூலநாதர் சுவாமி கோவிலில் இன்று அக்னி நட்சத்திர தோஷ நிவர்த்தி மகா அபிஷேகம் நடக்கிறது.பாகூரில் உள்ள வேதாம்பிகை சமேத மூலநாதர் சுவாமி கோவிலில், அக்னி நட்சத்திரத்தை முன்னிட்டு கடந்த 4ம் தேதி முதல் மூலநாதருக்கு தாராபிஷேகம் நடைபெற்று வருகிறது. அக்னி நட்சத்திரம் நிறைவையொட்டி, இன்று அக்னி நட்சத்திர தோஷ நிவர்த்தி மகா அபிஷேகம் நடக்கிறது.அதனையொட்டி காலை 6.00 மணிக்கு பால விநாயகர், வேதாம்பிகை அம்மன், சண்டிகேஸ்வரர் உள்ளிட்டோருக்கு சிறப்பு அபிஷேகம் நடக்கிறது. தொடர்ந்து காலை 7.00 மணிக்கு உலக நன்மை வேண்டி 11 கலசங்கள் ஸ்தாபனம் செய்து, ஆவஹந்தி ஹோமம், ருத்ராபிஷேகம் நடக்கிறது. 10.00 மணிக்கு கலச தீர்த்தம், பால், தயிர், தேன், சந்தனம், இளநீர், பன்னீர் உள்ளிட்ட திரவியங்களால் மூலநாதருக்கு சிறப்பு அபிஷேகம் செய்து, 11.௦௦ மணிக்கு மகா தீபாராதனை நடக்கிறது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்