உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / புதுச்சேரி / பாகூர் அரசுப் பள்ளியில் வேளாண் விழிப்புணர்வு

பாகூர் அரசுப் பள்ளியில் வேளாண் விழிப்புணர்வு

பாகூர் : பாகூர் அரசு நடுநிலைப்பள்ளியில், 8ம் வகுப்பு மாணவர்களுக்கு வேளாண்மை குறித்து விழிப்புணர்வு நிகழ்ச்சி நடந்தது.தலைமையாசிரியர் பழனிசாமி தலைமை தாங்கி, வேளாண்மை மற்றும் அது தொடர்பான திட்ட செயல்பாடுகளின் அவசியம் குறித்து விளக்கினார். அறிவியல் ஆசிரியை பிரபாவதி நோக்கவுரையாற்றினார். மாணவர்களின் எண்ணத்தில் வேளாண்மை குறித்தும் அதனை பாதுகாப்பதன் அவசியம் குறித்தும் தோன்றிய கருத்துக்கள் சேகரிக்கப்பட்டு, நாட்டில் முதன்மை தொழிலாக வேளாண் தொழிலை பாதுகாத்திட திட்ட செயல்பாடு தயாரிக்கப்பட்டது.நிகழ்ச்சி ஏற்பாடுகளை, ஆசிரியர்கள் துரைசாமி, செல்வக்குமரன், தம்பி ராஜலட்சுமி, கார்த்திகேயன், ரம்யா, ஜெயக்குமார், மஞ்சு ஆகியோர் செய்திருந்தனர். ஆசிரியை சங்கீதா நன்றி கூறினார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்



சமீபத்திய செய்தி