மேலும் செய்திகள்
திருப்பரங்குன்றம் வீடுகளில் மீண்டும் முருகன் கொடி
1 hour(s) ago
புதுச்சேரி : டிகிரியுடன், மதிப்புக்கூட்ட கல்வியும் இணைந்து படித்தால் வாழ்க்கை வளமாக இருக்கும் என கல்வியாளர் திருமகன் பேசினார்.'தினமலர்' வழிகாட்டி நிகழ்ச்சியில் கலை அறிவியல் படிப்பு தேர்வுகள் குறித்து அவர் பேசியதாவது:பிளஸ் 2 முடித்த மாணவர்களுக்கு ஏராளமான உயர் கல்வி வாய்ப்புகள் உங்கள் கண்முன்னே உள்ளன. ஆனால் உயர் கல்வி விஷயத்தில் கவனமாக தேர்வு செய்ய வேண்டும். ஒரு ஜீன்ஸ் தேர்வு செய்ய ஆயிரம் முறை யோசித்து தேர்ந்தெடுக்கிறோம். அப்படி என்றால், அடுத்து 30 ஆண்டுகளுக்கு உங்களின் எதிர்கால வாழ்க்கையை மாற்றக் கூடிய உயர் கல்வி படிப்பினை கவனமாக தேர்வு செய்ய வேண்டும்.எந்த கலை அறிவியல் படிப்பினையும் டிகிரியாக எடுத்து படிக்கலாம். ஆனால் அதனுடன் மதிப்புக்கூட்ட கல்வியும் சேர்த்து படித்தால் வாழ்க்கை வளமாக இருக்கும். உதாரணமாக பிசினஸ் ஸ்டடீஸ் படிப்புடன் கொஞ்சம் டேட்டா சயின்ஸ், செயற்கை நுண்ணறிவும் சேர்த்தால் சாதிக்கலாம். இதேபோன்று தான் ஒவ்வொரு கலை அறிவியல் படிப்புகளுக்கும் மதிப்புகூட்ட கல்வி உள்ளது. அதை தேடிப் பிடித்து படிக்க வேண்டும். அதே நேரத்தில் 'கம்யூனிகேஷன் ஸ்கில்' ரொம்ப முக்கியம். இன்றைக்கு டிகிரிக்கு வேலை கிடையாது. திறமைக்கு தான் வேலை என்பதை நினைவில் கொள்ள வேண்டும்.உயர் கல்வியில் எதை தேர்ந்தெடுக்கின்றீர்களோ, அதை விரும்பி படிக்க வேண்டும். எந்த படிப்பினை தேர்வு செய்தாலும், விரும்பி ஆர்வத்துடன், கடினமாகவும், அர்ப்பணிப்புடன் படித்தால் நிச்சயம் வெற்றி வந்து சேரும். இந்தியாவில் அதிக இளைஞர் வளம் உள்ளது. நம்முடைய இளைஞர் வளத்தை பல நாடுகள் சிவப்பு கம்பளம் விரித்து வரவேற்கின்றன.அப்படி இருக்கும் வெளிநாடுகளிலும் வேலைவாய்ப்புகள் கொட்டிக் கிடக்கின்றன. உன்னுடைய அர்ப்பணிப்புடன் கூடிய திறமை தான், வேலைக்கான கதவினை திறந்து விடும்.பள்ளிகளில் உங்களை கண்காணிக்க ஆசிரியர்கள், பெற்றோர்கள் இருந்தனர். ஆனால் கல்லுாரி வாழ்க்கை அப்படி அல்ல. உங்களுடைய வாழ்க்கை எப்படி அமையப் போகிறது என்பதை குறித்த தெளிவான நிலையை நீங்கள் எடுத்தாக வேண்டும்.எனவே கல்லுாரி வாழ்க்கையில் ஜாலியாக இருங்கள். அதே வேளையில் பள்ளி வாழ்க்கையை காட்டிலும் கூடுதல் பொறுப்புடன் ஜாலியாக இருங்கள். எண்ணங்கள் அனைத்தும் உயர்கல்வி மீதும், வேலைவாய்ப்பு மீதும் இருக்க வேண்டும். இவ்வாறு அவர் பேசினார்.
1 hour(s) ago