மேலும் செய்திகள்
பெண் தற்கொலை
11 hour(s) ago
ஹயக்ரீவர் கோவிலில் தேசிகர் உற்சவம்
11 hour(s) ago
குண்டர் தடுப்பு காவல் சட்டத்தை கோட்டை விடும் போலீஸ்
11 hour(s) ago
காரைக்காலில் அக் ஷர் ரோந்து கப்பல் அர்ப்பணிக்கும் விழா
11 hour(s) ago
புதுச்சேரி: வில்லியனுார் தொகுதியில் அம்பேத்கர் சிலைக்கு குடை அமைக்கும் பணியினை எதிர்க்கட்சி தலைவர் சிவா துவக்கி வைத்தார்.ஆதிதிராவிடர் நலம் மற்றும் பழங்குடியினர் நலத்துறை மூலம், வில்லியனுார் தொகுதி, வில்லியனூர் பெரியபேட்டில் அமைந்துள்ள அம்பேத்கர் சிலைக்கு ரூ. 24 லட்சத்து 82 ஆயிரம் மதிப்பில், படிக்கட்டுகளுடன் கூடிய ஸ்டெயின்லஸ் ஸ்டீல் குடை அமைப்பதற்கான பூமி பூஜை நடந்தது. நிகழ்ச்சியில், எதிர்க்கட்சித் தலைவர் சிவா குடை அமைக்கும் பணியினை பூஜை செய்து தொடங்கி வைத்தார்.ஆதிதிராவிடர் மேம்பாட்டுக் வரைநிலைக் கழக மேலாண் இயக்குனர் சிவக்குமார், ஆதிதிராவிட நலத்துறை இயக்குனர் இளங்கோவன், செயற்பொறியாளர் சிவக்குமார், உதவி பொறியாளர் திருவருட்செல்வன் மற்றும் தி.மு.க., தொகுதி செயலாளர் மணிகண்டன், பொதுக்குழு உறுப்பினர்கள் ராமசாமி, செல்வநாதன், தர்மராஜ், இலக்கிய அணி அமைப்பாளர் சீனு மோகன்தாசு, வர்த்தக அணி அமைப்பாளர் ரமணன், சிறுபான்மை பிரிவு அமைப்பாளர் ஹாலித், ஊர் முக்கியஸ்தர்கள் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.
11 hour(s) ago
11 hour(s) ago
11 hour(s) ago
11 hour(s) ago