உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / புதுச்சேரி / பெட்ரோல் பங்கில் ரூ.1.51 லட்சம் திருடிய ஊழியருக்கு 3 ஆண்டு சிறை

பெட்ரோல் பங்கில் ரூ.1.51 லட்சம் திருடிய ஊழியருக்கு 3 ஆண்டு சிறை

புதுச்சேரி: மாகி பெட்ரோல் பங்கில் ரூ. 1.51 லட்சம் திருடிய ஊழியருக்கு 3 ஆண்டு சிறை தண்டனை விதித்து மாகி சப் கோர்ட் அதிரடியாக உத்தரவிட்டது.புதுச்சேரி மாகி பிராந்தியத்தில் மாயாழி பெட்ரோல் பங்க் உள்ளது. இங்கு, கடந்தாண்டு செப்டம்பர் 8ம் தேதி ரூ.1.50 லட்சம் மாயமானது. இதுகுறித்து பெட்ரோல் பங்க் மேலாளர் அனுப் கங்காதரன், மாகி போலீசில் புகார் அளித்தார். போலீசார் வழக்கு பதிந்து விசாரணை நடத்தினர்.பெட்ரோல் பங்கில் இருந்த சி.சி.டி.வி., கேமிராக்களை ஆய்வு செய்ததில், பெட்ரோல் பங்கில் ஒரு நாளைக்கு முன்பு வேலைக்கு சேர்ந்த ஊழியரான, கேரளா வயநாட்டை சேர்ந்த சைலன்,47; என்பவர் ரூ. 1.51லட்சம் திருடியது தெரிய வந்தது. அதையடுத்து, டில்லியில் மறைந்திருந்த சைலனை போலீசார் கைது செய்து, அவர் மீது மாகி சப் கோர்ட்டில் வழக்கு தொடர்ந்தனர்.விசாரணை நடத்திய நீதிபதி மகாலட்சுமி, பெட்ரோல் பங்கில் திருடிய சைலனுக்கு 3 ஆண்டுகள் சிறை தண்டனை, ரூ. 5 ஆயிரம் அபராதம் விதித்து தீர்ப்பளித்தார்.இவ்வழக்கில் உதவி அரசு வழக்கறிஞர் தாமஸ் ஆஜரானார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்







அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை