உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / புதுச்சேரி / பாகூர் மூலநாதர் கோவிலில் அண்ணாமலை தரிசனம்

பாகூர் மூலநாதர் கோவிலில் அண்ணாமலை தரிசனம்

பாகூர் : பாகூர் மூலநாதர் கோவிலில் தமிழக பா.ஜ., மாநில தலைவர் அண்ணாமலை தரிசனம் செய்தார்.புதுச்சேரி, பாகூரில் சோழர் காலத்தில் கட்டப்பட்ட 1,400 ஆண்டுகள் பழமை வாய்ந்த வேதாம்பிகை சமேத மூலநாதர் கோவில் உள்ளது. இக்கோவிலில் தமிழக பா.ஜ., மாநில தலைவர் அண்ணாமலை நேற்று காலை சிறப்பு பூஜை செய்து, தரிசனம் செய்தார்.தொடர்ந்து, கோவிலின் ஸ்தல வரலாறு குறித்தும், மூலநாதர், கணபதி, முருகன், நவக்கிரகங்கள், துர்க்கை, பைரவர், பொங்கு சனி பகவான், சண்டீகேஸ்வரர் உள்ளிட்ட தெய்வங்களை பற்றி கோவில் அர்ச்சகர்கள் சங்கர் நாராயணன், பாபு ஆகியோரிடம் கேட்டறிந்தார். தொடர்ந்து, பால விநாயகருக்கு சிறப்பு அபிஷேக ஆராதனைகள் நடந்தது.லோக்சபா தேர்தல் முடிவுகள் வரும் 4ம் தேதி வெளியாக உள்ள நிலையில், சிறப்பு வழிபாட்டில் பங்கேற்ற அண்ணாமலை 108 தேங்காய் உடைத்து சுவாமி தரிசனம் செய்தார். வேதாம்பிகை சன்னதியில் சிறிது நேரம் தியானம் செய்து விட்டு புறப்பட்டு சென்றார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்





புதிய வீடியோ