உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / புதுச்சேரி / புதுச்சேரி, காரைக்கால் கோர்ட்டிற்கு புதிய நீதிபதிகள் நியமனம் 

புதுச்சேரி, காரைக்கால் கோர்ட்டிற்கு புதிய நீதிபதிகள் நியமனம் 

புதுச்சேரி, : புதுச்சேரி, காரைக்கால் கோர்ட்டிற்கு புதிய நீதிபதிகள் நியமனம் செய்யப்பட்டுள்ளனர்.திருவாரூர் தலைமை நீதிபதியாக பணியாற்றி வரும் பாலமுருகன் அங்கிருந்து இடமாற்றம் செய்யப்பட்டு, புதுச்சேரி தலைமை குற்றவியல் நீதிமன்ற நீதிபதியாக நியமிக்கப்பட்டுள்ளார். புதுச்சேரியில் பணியாற்றும் நீதிபதி மோகன், திருவள்ளூர் தலைமை குற்றவியல் நீதிமன்ற நீதிபதியாக நியமிக்கப்பட்டுள்ளார்.புதுச்சேரியில் மூன்றாவது கூடுதல் மாவட்ட நீதிபதியாக பணிபுரிந்து வரும் இளவரசன் இடமாற்றம் செய்யப்பட்டு, விழுப்புரம் மகளிர் விரைவு நீதிமன்ற செஷன்ஸ் நீதிபதியாக நியமிக்கப்பட்டுள்ளார். காரைக்கால் குடும்ப நல நீதிமன்ற நீதிபதியாக பணிபுரிந்து வந்த அல்லி, போதைப் பொருள் வழக்குகளை கையாளும் மதுரை 2-வது கூடுதல் சிறப்பு நீதிபதியாக நியமிக்கப்பட்டுள்ளார்.சென்னை குடும்ப நல கூடுதல் நீதிபதி சுமதி, புதுச்சேரி போக்சோ விரைவு நீதிமன்ற நீதிபதியாக நியமிக்கப்பட்டுள்ளார். சென்னை சிட்டி சிவில் நீதிமன்றத்தின் கூடுதல் நீதிபதி முருகானந்தம், காரைக்கால் மாவட்ட நீதிபதியாக பணி நியமனம் செய்யப்பட்டுள்ளார்.புதுச்சேரி போக்சோ விரைவு நீதினம்ற நீதிபதியாக பணியாற்றி வந்த சோபனா தேவி, நாகப்பட்டினம் மகளிர் விரைவு நீதிமன்ற நீதிபதியாக நியமிக்கப்பட்டுள்ளார். இதற்கான உத்தரவினை சென்னை ஐகோர்ட் நீதிபதி ஜோதிராமன் வெளியிட்டுள்ளார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்