மேலும் செய்திகள்
பெண் தற்கொலை
5 hour(s) ago
ஹயக்ரீவர் கோவிலில் தேசிகர் உற்சவம்
5 hour(s) ago
குண்டர் தடுப்பு காவல் சட்டத்தை கோட்டை விடும் போலீஸ்
5 hour(s) ago
காரைக்காலில் அக் ஷர் ரோந்து கப்பல் அர்ப்பணிக்கும் விழா
5 hour(s) ago
புதுச்சேரி: உயர் கல்வி குழுமம், பிப்மேட் கீழ் இயங்கும் 10 அரசு கல்லுாரிகளுக்கு இரண்டு மாத சம்பளம்போட நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகின்றது.புதுச்சேரி உயர் கல்வி குழுமத்தின் கீழ், இந்திரா நகர் இந்திரா காந்தி கலை அறிவியல், தவளக்குப்பம் ராஜிவ் காந்தி கலை அறிவியல், மதகடிப்பட்டு காமராஜர் கலை அறிவியல் கல்லுாரி, வில்லியனுார் கஸ்துாரிபா கலைஅறிவியல் கல்லுாரி, காரைக்கால் காமராஜர் கல்வியியல் கல்லுாரி உள்ளன.இவற்றில் 150 பேராசிரியர்கள், ஊழியர்கள் பணியாற்றி வருகின்றனர்.இவர்களுக்கு மார்ச், ஏப்ரல் மாதம் சம்பளம் வழங்க வில்லை. இதேபோல், பிப்மேட்டின் கீழ் உள்ள லாஸ்பேட்டை மகளிர் அரசு பொறியியல் கல்லுாரி, காரைக்கால் ஆண்கள் தொழில்நுட்ப கல்லுாரி, மகளிர் தொழில்நுட்ப கல்லுாரி, மாகி ஜவகர்லால் நேரு, ஏனாமில் அம்பேத்கர் தொழில்நுட்ப கல்லுாரிகளுக்கு இரண்டு மாதம் சம்பளம் வழங்க வில்லை. இதனால் 750க்கும் மேற்பட்ட பேராசிரியர்கள், ஊழியர்களுக்கு சம்பளம் வழங்க வில்லை.இந்நிலையில், உயர் கல்வி குழுமம், பிப்மேட் கீழ் உள்ள 10 அரசு கல்லுாரி களுக்கு சம்பளம் வழங்க நிதித்துறை ஒப்புதல் கொடுத்துள்ளது. இன்று 24ம் தேதி 10 அரசு கல்லுாரி பணியாற்றும் பேராசிரியர்கள், ஊழியர்களுக்கு இரண்டு மாத சம்பளம் வழங்கப்படுகிறது.
5 hour(s) ago
5 hour(s) ago
5 hour(s) ago
5 hour(s) ago