உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / புதுச்சேரி / ரகளை செய்த வாலிபர் கைது

ரகளை செய்த வாலிபர் கைது

திருக்கனுார்: கொடாத்துாரில் மது போதையில் ரகளை செய்த வாலிபரை போலீசார் கைது செய்தனர். திருக்கனுார் சப் இன்ஸ்பெக்டர் பிரியா மற்றும் போலீசார் நேற்று முன்தினம் தீவிர ரோந்து பணியில் ஈடுபட்டுக் கொண்டிருந்தனர். அப்போது, கொடாத்துார் பஸ் நிறுத்தம் அருகே பொது இடத்தில் மது அருந்திக் கொண்டு, அவ்வழியாக சென்ற பொது மக்களிடம் தகராறில் ஈடுபட்ட தமிழக பகுதியான குராம்பாளையம் பள்ளிக்கூட வீதியை சேர்ந்த குணா, 20; என்பவரை போலீசார் கைது செய்தனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

சமீபத்திய செய்தி