உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / புதுச்சேரி / கோவில் திருவிழாவில் ரகளை செய்தவர் கைது

கோவில் திருவிழாவில் ரகளை செய்தவர் கைது

அரியாங்குப்பம் : கோவில் திருவிழாவில், ரகளை செய்தவரை போலீசார் கைது செய்தனர். அரியாங்குப்பம், மணவெளியில் திரவுபதி அம்மன் கோவிலில் திருவிழா நடந்து வருகிறது. அதில், மணவெளி மாஞ்சாலை பகுதியில் உள்ள மாரியம்மன் கோவில் குளத்தில் தெப்பம் உற்சவம் நேற்று காலை நடந்தது. தெப்பக்குளத்தில், சாமியுடன் குறிப்பிட்டவர்களை மட்டும் போலீசார் அனுமதித்தனர். அதையும் மீறி, தெப்பத்தில், ஏறிய ஒருவர், மது போதையில், சாமியை துாக்கி சென்றவர்களிடம் தகராறு செய்து, ரகளையில் ஈடுபட்டார்.பாதுகாப்பு பணியில் இருந்து போலீசார், அவரை பிடித்து விசாரித்தனர். அவர், மணவெளி கலைஞர் நகரை சேர்ந்த் கஜேந்திரன், 38, என தெரியவந்து. அவர் மீது அரியாங்குப்பம் சப் இன்ஸ்பெக்டர் கதிரேசன் வழக்கு பதிந்து, செய்து சிறையில் அடைத்தார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்









அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை