உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / புதுச்சேரி / ஆரோவில் பவுண்டேஷன் நிர்வாக குழு கூட்டம்

ஆரோவில் பவுண்டேஷன் நிர்வாக குழு கூட்டம்

வானுார், : ஆரோவில் பவுண்டேஷனின் 67வது நிர்வாக குழு கூட்டம் நடந்தது.விழுப்புரம் மாவட்டம், ஆரோவில் பவுண்டேஷன் அலுவலகத்தில் நடந்த கூட்டத்திற்கு, ஆரோவில் நிர்வாக குழு தலைவரான தமிழக கவர்னர் ரவி தலைமை தாங்கினார். நிர்வாக குழு உறுப்பினரான , புதுச்சேரி கவர்னர் ராதாகிருஷ்ணன், நிர்வாக செயலாளர் ஜெயந்தி ரவி மற்றும் உறுப்பினர்கள் பங்கேற்றனர்.மதியம் 12:00 மணிக்கு துவங்கிய கூட்டத்தில், நிர்வாக செயல்பாடுகள், ஆரோவில் மேம்பாட்டுக்கான எதிர்கால திட்டங்கள், அதை செயல்படுத்துவதற்கான வழிமுறைகள் குறித்து விவாதிக்கப்பட்டது. உணவு இடைவேளைக்கு பின் மீண்டும் துவங்கிய கூட்டம் மாலை 6:30 மணி வரை நடந்தது.கூட்டத்தில் ஆரோவில் வளர்ச்சிப்பணிகள் குறித்தும், ஆரோவில் பகுதியில் மேற்கொள்ளப்பட்டு வரும் கிரவுன் சாலை உள்ளிட்ட திட்டப் பணிகளை விரைந்து முடிப்பது குறித்தும் ஆலோசிக்கப்பட்டது.முன்னதாக, ஆரோவில் வந்த கவர்னரை, கலெக்டர் பழனி மற்றும் நிர்வாகக் குழுவினர் வரவேற்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்



சமீபத்திய செய்தி