மேலும் செய்திகள்
ஓட்டல் ஊழியர் தற்கொலை போலீசார் விசாரணை
21-Aug-2024
புதுச்சேரி : உணவு விடுதி ஊழியரை பீர்பாட்டிலால் தாக்கி கொலை மிரட்டல் விடுத்த 3 பேரை போலீசார் தேடி வருகின்றனர். சென்னை ராயபுரம் பகுதியைச் சேர்ந்தவர் மோகன் 26, இவர் தனது நண்பர்களான பிரசாந்த், சாம், ஆகியோருடன் வார விடுமுறையை கொண்டாட புதுச்சேரிக்கு வந்தார். நேற்று முன்தினம் பழைய துறைமுகம் சீகல்ஸ் உணவு விடுதிக்கு சென்று இவர்கள், அங்கு மதுபோதையில் அட்டகாசத்தில் ஈடுப்பட்டனர். அப்போது அங்கு பணியில் இருந்த சேரன் 25, அவர்களை கண்டித்து ஓட்டலை விட்டு வெளியே போக சொன்னார். இதில் ஆத்திரமடைந்த மோகன் உள்ளிட்ட மூவரும் சேரனை அசிங்கமாக திட்டி, பீர்பாட்டிலால் தாக்கினர். பலத்தகாயமடைந்த சேரன் அரசு பொது மருத்துவமனையில் சிகிச்சை எடுத்து பின் ஒதியஞ்சாலை போலீசில் புகார் கொடுத்தார். அதன்பேரில் போலீசார் வழக்குப்பதிந்து மூவரை தேடி வருகின்றனர்.
21-Aug-2024