மேலும் செய்திகள்
வீடு புகுந்து தாக்கிய சம்பவம் 14 பேர் மீது வழக்கு பதிவு
2 hour(s) ago
பெயிண்டரை தாக்கிய 7 பேர் மீது வழக்கு பதிவு
2 hour(s) ago
புதிய தெரு மின் விளக்கு எம்.எல்.ஏ., இயக்கி வைப்பு
2 hour(s) ago
புதுச்சேரி: புதுச்சேரி சட்டசபை காலவரையறை இன்றி ஒத்தி வைக்கப்பட்டது.புதுச்சேரி சட்டசபை கடந்த 31ம் தேதி கவர்னர் உரையுடன் துவங்கியது.நிதித்துறை பொறுப்பு வகிக்கும் முதல்வர் ரங்கசாமி கடந்த 2ம் தேதி பட்ஜெட் தாக்கல் செய்தார். அதன்பின்பு, கவர்னர் உரை மற்றும் பட்ஜெட் மீதான விவாதம், மானிய கோரிக்கைகள் மீதான விவாதம் நடந்தது. நேற்று முன்தினம் மானிய கோரிக்கைகள் மீதான விவாதத்திற்கு முதல்வர், அமைச்சர்கள் பதில் அளித்தனர். இறுதி நாளான நேற்று தனி நபர் தீர்மானம் கொண்டுவரப்பட்டது. புதுச்சேரிக்கு தனி மாநில அந்தஸ்து வழங்க வேண்டும் என்ற தீர்மானம் நிறைவேற்றிய பின்பு சட்டசபை காலவரை இன்றி ஒத்தி வைப்பதாக சபாநாயகர் செல்வம் அறிவித்தார்.
2 hour(s) ago
2 hour(s) ago
2 hour(s) ago