உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / புதுச்சேரி / ஆடி அருணிமா கண்காட்சி; முதல்வர் துவக்கி வைப்பு

ஆடி அருணிமா கண்காட்சி; முதல்வர் துவக்கி வைப்பு

புதுச்சேரி : புதுச்சேரியில் ஆடி அருணிமா கலைக் கண்காட்சியினை முதல்வர் ரங்கசாமி துவக்கி வைத்தார்.மத்திய அரசின் பழங்குடியினர் விவகாரங்கள் அமைச்சகம் மற்றும் மலைவாழ் மக்கள் கூட்டுறவு கொள்முதல் மற்றும் விற்பனை மேம்பாட்டு இணையம் சார்பில், பாரம்பரிய பழங்குடியினரின் தொழில்முனைவு, கைவினை, கலாசாரம், உணவு மற்றும் வணிக முன்னெடுப்பை ஊக்குவிக்கும் வகையில், புதுச்சேரியில் ஆடி அருணிமா கண்காட்சி கடற்கரைச் சாலையில் உள்ள காந்தி திடலில் நேற்று துவங்கி, வரும் 15ம் தேதி வரை 10 நாட்கள் நடக்கிறது.கண்காட்சியினை முதல்வர் ரங்கசாமி திறந்து வைத்து அரங்குகளை பார்வைியட்டார். பொதுப்பணித்துறை அமைச்சர் லட்சுமி நாராயணன், மலைவாழ் மக்கள் கூட்டுறவு கொள்முதல் மற்றும் விற்பனை மேம்பாட்டு இணைய நிர்வாகிகள் கலந்து கொண்டனர். கைவினை கலைஞர்கள் திறமைகளையும், கலைச் செழுமையும் காட்டி, கண்ணையும் கருத்தையும் கவரும் கலைப் பொருட்களைக் காட்சிப்படுத்தும் விதமாக கண்காட்சியில் இடம்பெற்றுள்ளது.கண்காட்சியில் வடகிழக்கு மாநிலங்களான அசாம், திரிபுரா, மணிப்பூர், நாகலாந்து, மிசோரம், மேகாலயா மற்றும் அருணாச்சலப் பிரதேசத்தில் மலைவாழ் மக்களால் தயாரிக்கப்பட்ட கைத்தறித் துணி வகைகள், அணி கலன்கள், மரச்சாமான்கள், சுடுமண் கலைப் பொருட்கள், மண் பாண்டங்கள், கண் கவர் ஓவியங்கள், திரைச் சீலைகள் 30 அரங்குகளில் விற்பனைக்கு இடம்பெற்றுள்ளன.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை