உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / புதுச்சேரி / அரவிந்தர் கல்லுாரி ஆண்டு விழா

அரவிந்தர் கல்லுாரி ஆண்டு விழா

வானுார் : சேதராப்பட்டு அரவிந்தர் கலை மற்றும் அறிவியல் கல்லுாரியில் 24வது ஆண்டு விழா நடந்தது.கல்லுாரி கலையரங்கத்தில் நடந்த விழாவிற்கு, கல்லுாரி தலைவர் நித்தியானந்தன் தலைமை தாங்கினார். தமிழ்த்துறைத் தலைவர் வெண்ணிலா வரவேற்றார். சிறப்பு விருந்தினர் சென்னை அண்ணா பல்கலைக்கழக முன்னாள் பதிவாளர் கணேசன் சிறப்புரையாற்றி, பல்வேறு போட்டிகளில் வெற்றி பெற்ற மாணவர்களுக்கு பரிசு வழங்கினார்.சுபஸ்ரீ குரூப் ஆப் ஸ்கூல்ஸ் மற்றும் எஸ்.எம்., வித்யாலயா பள்ளி சேர்மன் சுபா சுப்ரமணியன் வாழ்த்திப் பேசினர். கல்லுாரி முதல்வர் சுரேஷ் ஆண்டறிக்கை வாசித்தார். நிர்வாக அதிகாரி திலகவதி மேற்பார்வையில் மாணவ, மாணவிகளின் கலை நிகழ்ச்சிகள் நடந்தது. வேதியியல் துறைத் தலைவர் புருஷோத்தமன் நன்றி கூறினார். நிகழ்ச்சியை வேதியியல் துறை பேராசிரியர் பிரியாலட்சுமி தொகுத்து வழங்கினார். பேராசிரியர்கள், மாணவ, மாணவிகள் பங்கேற்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்









அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை