மேலும் செய்திகள்
பெண் தற்கொலை
6 hour(s) ago
ஹயக்ரீவர் கோவிலில் தேசிகர் உற்சவம்
6 hour(s) ago
குண்டர் தடுப்பு காவல் சட்டத்தை கோட்டை விடும் போலீஸ்
7 hour(s) ago
காரைக்காலில் அக் ஷர் ரோந்து கப்பல் அர்ப்பணிக்கும் விழா
7 hour(s) ago
திருக்கனுார்: காட்டேரிக்குப்பம் போலீஸ் சார்பில் 10ம் வகுப்பு பொதுத் தேர்வில் தோல்வியடைந்த மாணவர்களுக்கான தன்னம்பிக்கை விழிப்புணர்வு நிகழ்ச்சி நடந்தது.லிங்காரெட்டிப் பாளையம் பள்ளியில் நடந்த நிகழ்ச்சிக்கு தலைமை ஆசிரியர் ஆதிமூலம் முன்னிலை வகித்தார். காட்டேரிக்குப்பம் சப் இன்ஸ்பெக்டர் தமிழரசன் வரவேற்றார். திருக்கனுார் இன்ஸ்பெக்டர் ராஜகுமார் தலைமை தாங்கி, தோல்வியடைந்த மாணவர்கள் சோர்வடையாமல் மன அழுத்தம் இன்றி, தன்னம்பிக்கையுடன் மீண்டும் படித்து வரும் கல்வி ஆண்டிலேயே பிளஸ் 1 வகுப்பில் சேர முயற்சிகள் மேற்கொள்ள வேண்டும் என பேசினார். மேலும், தேர்வில் வெற்றி பெற தேவையான அனைத்து உதவிகளையும் போலீசார் செய்து தர தயாராக உள்ளதாக கூறினார்.சப் இன்ஸ்பெக்டர் தமிழரசன் கூறுகையில், பொதுத்தேர்வில் தோல்வி அடைந்தவர்களுக்கான மறுதேர்வில் தேர்ச்சி அடையும் மாணவர்கள் அனைவரின் பிளஸ் 1 சேர்க்கைக்கான முழு செலவையும் ஏற்றுக் கொள்வதாக தெரிவித்தார். இதுகுறித்து பள்ளியின் தலைமை ஆசிரியர் ஆதிமூலம் கூறுகையில், பள்ளியில் பத்தாம் வகுப்பு பொது தேர்வு எழுதி மாணவர்களில் 10 பேர் தோல்வியடைந்தனர். இதனால், மன அழுத்தம் ஏற்பட்டு ஏதேனும் தவறான முடிவிற்கு செல்லக் கூடாது என்பதற்காக காட்டேரிக்குப்பம் போலீசார் அவர்களுக்கு தன்னம்பிக்கை ஊட்டும் வகையில் விழிப்புணர்வு ஏற்படுத்தியுள்ளனர்.மேலும் அவர்கள் தேர்ச்சி அடைவதற்கான அனைத்து உதவிகளையும் செய்து தருவதாக உறுதி அளித்துள்ளதால், மாணவர்கள் வரும் தேர்வில் நிச்சயம் வெற்றி பெறுவர் என நம்புகிறோம் என்றார்.
6 hour(s) ago
6 hour(s) ago
7 hour(s) ago
7 hour(s) ago