விழிப்புணர்வு நிகழ்ச்சி
புதுச்சேரி: மணவெளி தந்தை பெரியார் அரசு பெண்கள் மேல்நிலைப் பள்ளியில் நாட்டு நலப்பணித்திட்டம் சார்பில் மாணவிகளுக்கு போக்குவரத்து விழிப்புணர்வு நிகழ்ச்சி நடந்தது.பள்ளி துணை முதல்வர் விஜயா தலைமை தாங்கினார். தெற்கு பகுதி போக்குவரத்து போலீஸ் இன்ஸ்பெக்டர் கணேசன் கலந்து கொண்டு போக்குவரத்து விதிகள் குறித்தும், அதனை கடைபிடிக்கும் வழிமுறைகள் குறித்து விளக்கினார். பின் துண்டு பிரசுரங்களை மாணவிகளுக்கு வழங்கினார். நிகழ்ச்சியில், பள்ளி விரிவுரையாளர் ராஜசேகர், நாட்டுநலப்பணித்திட்ட அலுவலர் விஜயலட்சுமி கலந்து கொண்டனர்.