மேலும் செய்திகள்
பெண் தற்கொலை
15 hour(s) ago
ஹயக்ரீவர் கோவிலில் தேசிகர் உற்சவம்
15 hour(s) ago
குண்டர் தடுப்பு காவல் சட்டத்தை கோட்டை விடும் போலீஸ்
15 hour(s) ago
காரைக்காலில் அக் ஷர் ரோந்து கப்பல் அர்ப்பணிக்கும் விழா
15 hour(s) ago
காரைக்கால்: காரைக்காலில் வேளாண்துறை சார்பில் புதிய ரக உளுந்து சாகுபடி குறித்து விவசாயிகளுக்கு விழிப்புணர்வு நடந்தது. காரைக்காலில் புதிய ரகமான வம்பன் -11உளுந்து சாகுபடியை பிள்ளைத் தெருவாசல் பகுதியைச் சேர்ந்த ஆரோக்கியதாஸ் என்ற விவசாயி 8 ஏக்கர் நிலப்பரப்பில் பயிரிட்டுள்ளார். புதிய ரக உளுந்து பயிர் குறித்து விவசாயிகளுக்கு விழிப்புணர்வு நிகழ்ச்சி நடந்தது.வேளாண் தொழில்நுட்ப மேலாண்மை முகமையின் மூலம் நடந்த விழிப்புணர்வு நிகழ்ச்சிக்கு கூடுதல் வேளாண் இயக்குனர் கணேசன் தலைமை தாங்கினார். வேளாண் கல்லூரி உழவியல் துறை பேராசிரியர் மோகன் புதிய ரகமான வம்பன்-11 உளுந்து சாகுபடியில் மேற்கொள்ள வேண்டிய தொழில்நுட்ப வழிமுறைகளை விளக்கினார்.நிகழ்ச்சியில் ஆத்மா துணை திட்ட இயக்குனர் ஜெயந்தி, வேளாண் அலுவலர் அமினா பீபி, கடைமடை விவசாய சங்கத்தலைவர் சுரேஷ், வட்டார தொழில்நுட்ப மேலாளர் கண்ணன் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.
15 hour(s) ago
15 hour(s) ago
15 hour(s) ago
15 hour(s) ago