உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / புதுச்சேரி / பாம் ரவி கொலை வழக்கு: புதுச்சேரி கோர்ட்டில் இன்று தீர்ப்பு

பாம் ரவி கொலை வழக்கு: புதுச்சேரி கோர்ட்டில் இன்று தீர்ப்பு

புதுச்சேரி: புதுச்சேரியில் நாட்டு வெடிகுண்டு வீசி ரவுடி பாம் ரவி மற்றும் அவரது நண்பரை வெட்டி கொலை செய்த வழக்கில் இன்று கோர்ட்டில் தீர்ப்பு வழங்கப்பட உள்ளது.புதுச்சேரி, தாவீதுபேட் நகராட்சி குடியிருப்பை சேர்ந்தவர் ரவுடி பாம் ரவி, 33. இவர் மீது 6 கொலை வழக்கு உள்ளிட்ட ஏராளமான வழக்கு உள்ளன. ஜாமினில் வெளியே வந்த ரவி, வாணரப்பேட்டை முருகசாமி நகர், நேரு வீதி யைச் சேர்ந்த பரிடா அந்தோணி ஸ்டீபன், 28; என்பவருடன் கடந்த 2021 அக்டோபர் 24ம் தேதி பைக்கில் சென்று கொண்டிருந்தார்.வாணரப்பேட் ஆலன் வீதி, ராஜராஜன் வீதி சந்திப்பு அருகே பைக்கை வழிமறித்த கும்பல் நாட்டு வெடிகுண்டு வீசியது. அதில் தப்பித்த இருவரையும் கத்தியால் வெட்டி படுகொலை செய்தனர். இந்த கொலை வழக்கு தொடர்பாக ரவுடி வினோத், தீன், மர்டர் மணிகண்டன், தியாகு, பிரேம், ராஜா, தேவேந்திரன், அருண், பிரவீன், ரோமக், ஆட்டோ மணி உள்ளிட்ட 31 பேர் மீது கொலை வழக்குப் பதிவு செய்யப்பட்டது.இரட்டை கொலை வழக்கு விசாரணை, புதுச்சேரி மூன்றாவது கூடுதல் மாவட்ட நீதிமன்றத்தில் நடந்து வந்தது. வழக்கு விசாரணை முடிந்து நேற்று தீர்ப்பு வழங்குவதாக இருந்தது. ஆனால் தீர்ப்பு வெளியாக வில்லை. இன்று 6ம் தேதி தீர்ப்பு வழங்கப்படும் என, தெரிவிக்கப்பட்டுள்ளது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்









அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை