உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / புதுச்சேரி / மாங்கனித் திருவிழாவிற்கு காரைக்காலில் பந்தக்கால் முகூர்த்தம்

மாங்கனித் திருவிழாவிற்கு காரைக்காலில் பந்தக்கால் முகூர்த்தம்

காரைக்கால்: காரைக்காலில் மாங்கனி திருவிழாவை முன்னிட்டு நேற்று பந்தக்கால் முகூர்த்தம் நடந்தது.63 நாயன்மார்களின் ஒருவரான காரைக்கால் அம்மையாருக்கு தனிக்கோவில் காரைக்காலில் உள்ளது. இக்கோவிலில் ஆண்டு தோறும் அம்மையாரின் கணவரிடம் சிவபெருமாள் மாங்கனி கொடுத்து அனுப்பு நிகழ்ச்சி நடக்கும். அப்போது அடியார் வேடத்தில் சிவபெருமான் வந்து சாப்பிடுவதால், காரைக்கால் அம்மையாரை பிரிந்து அவரது கணவர் வெளியூர் செல்வார். அம்மையார் இறைவனை காண கயிலாயத்திற்கு தலைகீழாக கையால் நடந்து செல்வதை சித்தரிக்கும் வகையில் ஆண்டுதோறும் மாங்கனி திருவிழா வெகு விமர்சையாக நடைபெறும். இத்தாண்டு வரும் ஜூன் 19ம் தேதி மாப்பிள்ளை அழைப்பு, 20ம் தேதி காரைக்கால் அம்மையார் என்று அழைக்கப்படும் புனிதவதியார் பரமதத்தர் திருக்கல்யாணம்நடக்கிறது. 21ம் தேதி அதிகாலை 3:00 மணிக்கு பஞ்சமூர்த்திகள் மகா அபிஷேகம், முத்துப்பல்லக்கில் நகர்வலம் வருதல், பரமதத்தர் இரண்டு மாங்கனிகளை வீட்டிற்கு கொடுத்து அனுப்புதல், சிவபெருமான் காவியுடை ருத்திராட்சம் தாங்கி பிச்சாண்டவராக அவதரித்து, பவழக்கால் விமானத்தில் வீதியுலா வரும் போது பக்தர்கள் தங்களது வீடுகளில் இருந்து மாங்கனிகளை வீசும் நிகழ்ச்சி நடைபெறும். இவ்விழாவை முன்னிட்டு அம்மையார் சன்னதி வளாகத்தில் நேற்று பந்தக்கால் முகூர்த்தம் நடந்தது. நிகழ்ச்சியில் கோவில் நிர்வாக அதிகாரி அருணகிரிநாதன், கோவில் தனி அதிகாரி காளிதாசன் உட்பட பலர் பங்கேற்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்









புதிய வீடியோ