உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / புதுச்சேரி / லாரி மீது பைக் மோதல்: டாக்டர் பலி

லாரி மீது பைக் மோதல்: டாக்டர் பலி

கள்ளக்குறிச்சி : வேப்பூர் அடுத்த ஐவதுகுடி கிராமத்தை சேர்ந்தவர் ராஜேந்திரன் மகன் கோகுல்ராஜ்,29; பல் டாக்டரான இவ், நேற்று முன்தினம் இரவு, கள்ளக்குறிச்சி மாவட்டம், கொங்கராயபாளையத்தில் நடத்தி வரும் கிளினிக்கை பூட்டிக் கொண்டு பைக்கில் வீட்டிற்கு புறப்பட்டார். கூத்தக்குடி அருகே சென்றபோது, முன்னால் சென்ற லாரியின் டிரைவர், திடீரென பிரேக் அடித்தார். அப்போது, பின்னால் சென்ற கோகுல்ராஜின் பைக், லாரி மீது மோதியது. அதில் கோகுல்ராஜ் இறந்தார். வரஞ்சரம் போலீசார் வழக்கு பதிந்து விசாரித்து வருகின்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்



அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை