| ADDED : ஏப் 11, 2024 03:49 AM
புதுச்சேரி: தபால் ஓட்டுகளில், ஒரு சிங்கிள் ஓட்டையும் மிஸ் செய்யாமல் பா.ஜ., ஆதரவு திரட்டியுள்ளது.புதுச்சேரி லோக்சபா தேர்தலில் நான்குமுனை போட்டி நிலவும் சூழ்நிலையில் ஓட்டுகள் சிதறும் வாய்ப்பு உள்ளதால், தபால் ஓட்டுகளின் முக்கியத்துவம் அதிகரித்துள்ளது. இந்த தபால் ஓட்டுகளை இந்த முறை கவனம் செலுத்தி வளைத்ததில், பா.ஜ., முன்னணியில் உள்ளது.தொகுதியில் ஒரு தபால் ஓட்டு,சர்வீஸ் ஓட்டு இருந்தாலும்கூட, அவர்களை கண்டறிந்து அவர்களை தேடி சென்று, பா.ஜ.,வினர் கேன்வாஸ் செய்துள்ளனர். தபால் ஓட்டு உள்ளவர்களிடம் பா.ஜ., வேட்பாளர் நமச்சிவாயமும் மொபைல்போனில் பேசி, ஆதரவு கேட்டுள்ளார்.தேர்தலில் வெற்றி, தோல்வியை பல நேரங்களில் தபால் ஓட்டுகளே நிர்ணயிக்கின்றன. இதை கருத்தில் கொண்டே தபால் ஓட்டுக்கள் மீது பா.ஜ., தனிக் கவனம் செலுத்தியுள்ளது. ஆனால் மற்ற கட்சிகள் தபால் ஓட்டுகளில் தனிகவனம் செலுத்தவில்லை.தபால் ஓட்டுகளில், தாமரை எவ்வளவு அறுவடை செய்துள்ளது என்பது ஒட்டு எண்ணிக்கையின்போது தெரிந்துவிடும்.