உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / புதுச்சேரி / பா.ஜ., ஆட்சி முடிய போகிறது: காங்., வேட்பாளர் ஆருடம் காங்., வேட்பாளர் ஆருடம்

பா.ஜ., ஆட்சி முடிய போகிறது: காங்., வேட்பாளர் ஆருடம் காங்., வேட்பாளர் ஆருடம்

விக்கிரவாண்டி : 'இண்டியா' கூட்டணி வெற்றி பெற்றால் தமிழ்நாடு வளம் பெறும்' எனக் கூறி கடலுார் லோக்சபா தொகுதி காங்., வேட்பாளர் விஷ்ணுபிரசாத் ஓட்டு கேட்டார்.விழுப்புரம் அடுத்த வி.சாலையில் முதல்வர் ஸ்டாலின் பங்கேற்ற தேர்தல் பிரசார கூட்டத்தில் அவர் பேசியதாவது:'இண்டியா' கூட்டணி இப்போது துவங்கிய கூட்டணி அல்ல. கடந்த 2019ல் மோடி அராஜக ஆட்சியை அகற்ற கங்கணம் கட்டி ஏற்படுத்தப்பட்ட கூட்டணி. நேற்று பெய்த மழையில் இன்று முளைத்த காளான் அல்ல இந்த கூட்டணி.இன்று வரை தமிழக மக்களுக்காக, நாட்டு மக்களுக்காக போராடுகின்ற கூட்டணியாக 'இண்டியா' கூட்டணி உள்ளது. 2019ல் துவங்கிய போர் 2024ல் முடியப் போகிறது. பா.ஜ., அராஜக ஆட்சி முடியப் போகிறது. 'இண்டியா' கூட்டணி வெற்றி பெற்றால் இந்தியா மட்டுமல்ல, தமிழ்நாடு வளம் பெறும்.இவ்வாறு காங் .,வேட்பாளர் விஷ்ணு பிரசாத் பேசினார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்