| ADDED : ஜூலை 12, 2024 05:30 AM
புதுச்சேரி: பாரதிதாசன் மகளிர் கல்லுாரியில் நடந்த ரத்த தான முகாமில் பேராசிரியர்கள், மாணவிகள் ஆர்வமாக ரத்த தானம் செய்தனர்.பாரதிதாசன் அரசு மகளிர் கல்லுாரியின் நாட்டு நலப்பணித் திட்டம், புதுச்சேரி ரோட்டரி சங்கம், இந்திரா காந்தி அரசு மருத்துவ கல்லுாரி சார்பில் கல்லுாரி வளாகத்தில் ரத்த தான முகாம் நடந்தது.கல்லுாரி முதல்வர் ராஜிசுகுமார் சிறப்புரையாற்றி துவக்கி வைத்தார். தொடர்ந்து காலை 10:30 மணி முதல் மாலை 4:30 மணி வரை நடந்த முகாமில் பேராசிரியர்கள், மாணவிகள், ஊழியர்கள் ரத்த தானம் செய்தனர். கல்லுாரி மாணவிகளுக்கு ரத்த தானம் அவசியம் குறித்தும் எடுத்துரைக்கப்பட்டது. நிகழ்ச்சியில் மாநில நாட்டு நலப்பணித் திட்ட அலுவலர் சதீஷ்குமார், புதுச்சேரி நகர ரோட்டரி சங்க தலைவர் அறிவழகன் கலந்து கொண்டனர். ஏற்பாடுகளை கல்லுாரி நாட்டு நலப்பணித் திட்ட அலுவலர்கள் ராஜலட்சுமி, ஆரோக்கிய மேரி செய்திருந்தனர்.