உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / புதுச்சேரி / அரசு மருத்துவமனையில் ரத்த தான தின விழிப்புணர்வு

அரசு மருத்துவமனையில் ரத்த தான தின விழிப்புணர்வு

புதுச்சேரி: இந்திராகாந்தி அரசு பொது மருத்துவமனையில் ரத்த தானம் செய்வோரை கவுரவிக்கும் விழா நடத்தப்பட்டது.இந்திராகாந்தி அரசு மருத்துவமனை மற்றும் பட்ட மேற்படிப்பு நிறுவனம் சார்பில், உலக ரத்த தானம் செய்வோர் தினம் நேற்று அனுசரிக்கப்பட்டது. தொடர்ந்து 20 ஆண்டுகளாக ரத்த தானம் செய்வோர் அனைவரையும் கவுரவிக்கும் வகையில், கருத்தரங்கு கூடத்தில் விழா நடத்தப்பட்டது.மருத்துவ கண்காணிப்பாளர் செவ்வேள் தலைமை தாங்கினார்.ரத்த வங்கியின் தலைமை மருத்துவ அதிகாரி ராதிகா, மருத்துவ அதிகாரி டயனா ஆகியோர் முன்னிலை வகித்தனர். தொடர்ந்து ரத்த தானம் செய்வோரை கவுரவித்து பரிசு வழங்கப்பட்டது.நிகழ்ச்சியில், உள்ளிருப்பு மருத்துவ அதிகாரி, ஷமிமுனிசா பேகம், மக்கள் தொடர்பு அதிகாரி ஆத்மநாதன், குறை தீர்ப்பு அதிகாரி ரவி, மருத்துவர்கள், ரத்த தானம் செய்வோர்கள் உட்பட பலர் கலந்து கொண்டனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்









அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை