உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / புதுச்சேரி / காரைக்காலில் மாணவரை கழுத்தறுத்து கொன்ற சிறுவன் கைது; தங்கையிடம் அத்துமீறியதை தட்டி கேட்டதால் வெறிச்செயல்

காரைக்காலில் மாணவரை கழுத்தறுத்து கொன்ற சிறுவன் கைது; தங்கையிடம் அத்துமீறியதை தட்டி கேட்டதால் வெறிச்செயல்

காரைக்கால் : காரைக்காலில் சிறுமியிடம் அத்துமீறியதை தட்டிக் கேட்ட 13 வயது சகோதரதனை, கழுத்து அறுத்து கொலை செய்த 17 வயது சிறுவனை போலீசார் கைது செய்தனர்.காரைக்கால் மாவட்டம், திருப்பட்டினம் நிரவியைச் சேர்ந்த அரசு பள்ளியில் 8ம் வகுப்பு படிக்கும் 13 வயது சிறுவன் நேற்று முன்தினம், பூட்டிய வீட்டிற்குள் கழுத்து அறுத்து கொலை செய்யப்பட்டு கிடந்தார். இதுகுறித்து நிரவி போலீசார் வழக்கு பதிந்து விசாரணை மேற்கொண்டனர். அதில், கொலை செய்யப்பட்ட சிறுவனின் சகோதரியிடம் அதே பகுதியைச் சேர்ந்த 17 வயது சிறுவன் பாலியல் சீண்டலில் ஈடுபட்டுள்ளார். இதை சிறுமியின் சகோதரர் சிறுவன், கண்டித்ததுடன், தனது தாயிடம் தகவலை கூறினார்.அதனைத் தொடர்ந்து சிறுமியின் தாய், 17 வயது சிறுவனை கண்டித்தார். இதனால், ஆத்திரமடைந்த 17 வயது சிறுவன், சிறுமியின் சகோதரனை கொலை செய்ய திட்டமிட்டார்.அதன்படி நேற்று முன்தினம் தனது வீட்டில் யாரும் இல்லாத சமயத்தில் சிறுமியின் சகோதரனை விளையாடலாம் எனக் கூறி, தனது வீட்டிற்கு அழைத்து சென்று, ஏற்கனவே வாங்கி வைத்திருந்த கத்தியால் சிறுவன் கழுத்தை அறுத்து கொலை செய்து விட்டு தப்பி சென்றது தெரிய வந்தது.மயிலாடுதுறை வடக்கரையில் உறவினர் வீட்டில் பதுங்கியிருந்த 17 வயது சிறுவனை தனிப்படை போலீசார் கைது செய்து காரைக்கால் கொண்டு வந்தனர்.இந்நிலையில், கொலை செய்யப்பட்ட சிறுவனின் தாய் தனது மகள்களுடன் கலெக்டர் அலுவலகத்தில் அளித்த மனுவில்; கொலை செய்த சிறுவன் தன்னுடைய மகளிடம் தவறாக நடந்து கொண்டதாவும், அதனை தட்டி கேட்டதால் தனது மகனை கழுத்து அறுத்து கொலை செய்தார். கொலையாளியை போக்சோ சட்டத்தின் கீழ் வழக்கு பதிந்து கைது செய்ய வேண்டும். 5 மருத்துவர்கள் தலைமையில் எனது மகன் உடலைபிரேத பரிசோதனை செய்து, வீடியோ பதிவு செய்ய வேண்டும். கொலையாளிக்கு கடுமையான தண்டனை பெற்று தர வேண்டும் என கண்ணீருடன் புகார் அளித்தார்.இதைத் தொடர்ந்து, சிறுவன் மீது கொலை மற்றும் போக்சோ பிரிவின் கீழ் போலீசார் வழக்கு பதிவு செய்தனர்.சிறுவனை கொலை செய்ய திட்டமிட்ட 17 வயது சிறுவன், ஆன்லைன் மூலம் கடந்த சில நாட்களுக்கு முன்பு கத்தி வாங்கி தயாராக வைத்திருந்தது விசாரணையில் தெரிய வந்தது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்









சமீபத்திய செய்தி