உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / புதுச்சேரி / ரொட்டி பால் ஊழியர்கள் ஆர்பாட்டம்

ரொட்டி பால் ஊழியர்கள் ஆர்பாட்டம்

புதுச்சேரி: உயர்த்தப்பட்ட சம் பளம் வழங்க வலியுறுத்தி, ரொட்டி பால் ஊழியர்கள் கல்வித்துறை அலுவலகம் முன் ஆர்பாட்டம் நடத்தினர்.புதுச்சேரி அரசு பள்ளிகளில் பணியாற்றி வரும் ரொட்டி பால் ஊழியர்கள் ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் பணிபுரிந்து வருகின்றனர். இவர்களுக்கு மாதம் ரூ.18 ஆயிரம் சம்பளம் உயர்த்தி வழங்கப்படும் என முதல்வர் ரங்கசாமி அறிவித்தார்.ஆனால் இதுவரை வழங்கவில்லை. உயர்த்தப்பட்ட சம்பளத்தை வழங்க வலியுறுத்தி சங்க ஒருங்கிணைப்பாளர் மாறன் தலைமையில் கல்வித்துறை அலுவலகம் முன் போராட்டம் நடத்தினர். போராட்டத்தில் காலையில் பள்ளிக்கு சென்று கால் காய்ச்சி மாணவர்களுக்கு கொடுத்துவிட்டு, பின் காலை 10 மணி முதல் தொடர் போராட்டம் நடத்துவது உள்ளிட்ட கோரிக்கை களை வலியுறுத்தி கோஷமிட்டனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

புதிய வீடியோ