உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / புதுச்சேரி / பிரிட்ஜஸ் லேர்னிங் வித்யாலயா பள்ளி பாரம்பரிய முறையில் உணவு திருவிழா

பிரிட்ஜஸ் லேர்னிங் வித்யாலயா பள்ளி பாரம்பரிய முறையில் உணவு திருவிழா

புதுச்சேரி: பிரிட்ஜஸ் லேர்னிங் வித்யாலயா பள்ளியில் நடந்த உணவு திருவிழாவில்,பாரம்பரிய முறையில் பல வகையான உணவுகள் வைத்து விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டது.புதுச்சேரி பெரியார் நகரில் உள்ள பிரிட்ஜஸ் லேர்னிங் வித்யாலயா பள்ளியில் உணவு திருவிழா நடந்தது. ஆசிரியர் துளசி வரவேற்றார். பள்ளி தாளாளர் புவனா வாசுதேவன், பாரம்பரிய உணவு பழக்கங்கள், இயற்கையோடு கூடிய உணவு முறைகளை கடைப்பித்தால், ஆரோக்கியமாக நம்மை பாதுகாத்து கொள்ள முடியும். மேற்கத்திய உணவுகள் உண்பதால் புற்று நோய், மனஅழுத்தம், உடல் பருமன் போன்ற பல விதமான நோய்கள் வருவதால் அந்த உணவுகளை தவிர்க்க வேண்டும் என சிறப்புரை நிகழ்த்தினார்.சிறப்பு விருந்தினராக சமுதாய கல்லுாரி மேலாண்மை துறை பேராசிரியர் பாரதி சிறப்புரை நிகழ்த்தினார்.விழாவில், பள்ளி மாணவர்கள் வீட்டில் இருந்து பாரம்பரிய முறையில் பல வகையான சத்தான உணவுகளை எடுத்து வந்து பார்வையாளர்கள் முன்பு வைத்து விழிப்புணர்வு ஏற்படுத்தினர்.நிகழ்ச்சியில், பள்ளி, ஆசிரியர்கள், மாணவர்கள், பெற்றோர்கள் கலந்து கொண்டனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்



முக்கிய வீடியோ