மேலும் செய்திகள்
பெண் தற்கொலை
9 hour(s) ago
ஹயக்ரீவர் கோவிலில் தேசிகர் உற்சவம்
9 hour(s) ago
குண்டர் தடுப்பு காவல் சட்டத்தை கோட்டை விடும் போலீஸ்
9 hour(s) ago
காரைக்காலில் அக் ஷர் ரோந்து கப்பல் அர்ப்பணிக்கும் விழா
9 hour(s) ago
புதுச்சேரி: மதுபோதையில் தகராறு செய்ததை கண்டித்த 'ஜிம்' பயிற்சியாளரை தலையில் கல்லை போட்டு கொலை செய்த கும்பலை போலீசார் தேடி வருகின்றனர். புதுச்சேரி வம்பாக்கீரப்பாளையம் தெப்பகுளம் வீதியை சேர்ந்தவர் வீரமணி மகன் விக்கி (எ) மணிகண்டன்,35; தனியார் உடற்பயிற்சி கூட பயிற்சியாளர். இவர், நேற்று மாலை 5:30 மணிக்கு அதே பகுதியில் இறந்த ஆட்டோ டிரைவர் சாமிநாதன் இறுதி ஊர்வலத்தில் பங்கேற்றார்.அப்போது, வம்பாக்கீரப்பாளையம் ஆட்டோ ஸ்டாண்ட் அருகே தகராறு செய்து கொண்டிருந்த 5 பேர் கொண்ட கும்பலை விக்கி மற்றும் அதேபகுதியை சேர்ந்த மூர்த்தி,25; ஆகியோர் கண்டித்தனர்.ஆத்திரமடைந்த அந்த கும்பல், விக்கி உள்ளிட்ட இருவரையும் சரமாரியாக தாக்கியது. மூர்த்தி அங்கிருந்து ஓடிவிட்டார். விக்கி மயங்கி விழுந்தார். பின்னர், போதை கும்பல், சாலையோரம் கிடந்த கிராணைட் கல்லை துாக்கி, மயங்கி கிடந்த விக்கி தலையில் போட்டது. அதில், அவர் தலை நசுங்கி சம்பவ இடத்திலேயே இறந்தார். அங்கிருந்தவர்கள் கூச்சலிட்டதும் போதை கும்பல், விக்கி தலை மீது சாக்கை போட்டுவிட்டு தப்பி சென்றது.தகவலறிந்த ஒதியஞ்சாலை இன்ஸ்பெக்டர் செந்தில்குமார் மற்றும் போலீசார் விரைந்து சென்று, விக்கி உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும், இதுகுறித்து வழக்கு பதிந்து விசாரித்து வருகின்றனர். முதல்கட்ட விசாரணையில், அதேப் பகுதியை சேர்ந்த கார்த்திக், அசோக் உள்ளிட்டோர் கொலை சம்பவத்தில் ஈடுபட்டிருப்பது தெரியவந்தது.
9 hour(s) ago
9 hour(s) ago
9 hour(s) ago
9 hour(s) ago