மேலும் செய்திகள்
அரசு தேர்வில் வெற்றி பெற மாணவர்களுக்கு வாழ்த்து
4 hour(s) ago
தேசிய விருது பெற்றவருக்கு பாராட்டு விழா
4 hour(s) ago
புதுச்சேரி இந்து முன்னணி தீபம் ஏற்றும் போராட்டம்
4 hour(s) ago
புதுச்சேரி: புதுச்சேரி லோக்சபா தேர்தலில் போட்டியிடும் வேட்பாளர்கள் 2வது செலவினங்கள் கணக்குகள் சரிபார்ப்பு கூட்டம் நடந்தது.புதுச்சேரி லோக்சபா தேர்தலை முன்னிட்டு, வரும் 19ம் தேதி நடக்கிறது. புதுச்சேரி தொகுதியில் 26 வேட்பாளர்கள் போட்டியிடுகின்றனர். தேர்தலில் போட்டியிடும் வேட்பாளர்கள் தேர்தல் செலவினங்கள் சரிபார்ப்புக் கூட்டம் கலெக்டர் அலுவலகத்தில் நடந்தது. மொத்தமுள்ள 26 வேட்பாளர்களில் 25 பேர் மற்றும் அவர்களின் முகவர்கள் கலந்து கொண்டனர். இந்த 25 வேட்பாளர்கள் சமர்ப்பிக்கப்பட்ட தேர்தல் செலவினக் கணக்குகளை தேர்தல் துறையால் அமைக்கப்பட்டுள்ள, தேர்தல் செலவினக் செலவின நிழற் பதிவேட்டின் கணக்குகளோடு ஒப்பிட்டு சரிபார்த்ததில் 22 வேட்பாளர்களின் தேர்தல் செலவினக் கணக்குகள் சரியாக இருந்ததால் ஏற்றுக் கொள்ளப்பட்டது.3 வேட்பாளர்களின் தேர்தல் செலவினக் கணக்குகள், செலவின நிழற்பதிவேட்டின் கணக்குகளோடு வேறுபாடு இருந்ததால், அதற்கான விளக்கம் கேட்கப்பட்டுள்ளது. இதில் ஒரு வேட்பாளர், துறையால் பராமரிக்கப்படும் நிழல் பதிவேட்டின் கணக்கின்படி மதிப்பீடு சரிபார்க்கப்பட்ட தேர்தல் செலவினக் கணக்குகள் தொடர்பான விவரங்கள் அனைத்தும் மாவட்ட தேர்தல் அதிகாரியின் அலுவலகத் தகவல் பலகையிலும், தேர்தல் ஆணையத்தின் இணையதளத்திலும் பொதுமக்களின் பார்வைக்காக வெளியிடப்பட்டுள்ளது.
4 hour(s) ago
4 hour(s) ago
4 hour(s) ago