உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / புதுச்சேரி / போலி ஆவணம் தயாரித்து நிலம் அபகரிப்பு சார் பதிவாளர் உள்ளிட்ட 6 பேர் மீது வழக்கு

போலி ஆவணம் தயாரித்து நிலம் அபகரிப்பு சார் பதிவாளர் உள்ளிட்ட 6 பேர் மீது வழக்கு

பண்ருட்டி : கடலுார் மாவட்டம், பண்ருட்டி அடுத்த மேல்குமாரமங்கலம் கிராமத்தை சேர்ந்தவர் கலியமூர்த்தி,59; இவருக்கு, மணம்தவிழ்ந்தபுத்துார் கிராமத்தில் ரூ.50 லட்சம் மதிப்பில் 38 சென்ட் நிலம் உள்ளது. இந்த நிலம், அதே கிராமத்தை சேர்ந்த திரிசங்கு பெயரில் கிரயமாகி உள்ளதாக கலியமூர்த்திக்கு தகவல் கிடைத்தது.இதுகுறித்து கலியமூர்த்தி அளித்த புகாரின் பேரில் மாவட்ட குற்றப்பிரிவு போலீசார் விசாரணை செய்தனர். அதில், கலியமூர்த்திக்கு சொந்தமான நிலத்தின் பத்திரம் மற்றும் அவரது வாக்காளர் அடையாள அட்டையை திரிசங்கு திருடி, கலியமூர்த்தி ் போட்டோவிற்கு பதில் மூர்த்தி என்பவரின் போட்டோவை வைத்து, போலி வாக்காளர் அடையாள அட்டை திரிசங்கு தயாரித்துள்ளார்.இந்த போலி வாக்காளர் அடையாள அட்டையை ஆதாரமாக கொண்டு கலியமூர்த்தி நிலத்தை மூர்த்தியை வைத்து புதுப்பேட்டை சார்பதிவாளர் அலுவலகத்தில் திரிசங்கு கிரையம் பெற்றது தெரிய வந்தது.அதன்பேரில் திரிசங்கு, மூர்த்தி, பத்திர எழுத்தர் சீனுவாசன், மணம்தவிழ்ந்தபுத்துார் சீனுவாசன், திருநாவுக்கரசு, சார் பதிவாளர் பாலாஜி ஆகியோர் மீது மாவட்ட குற்றப்பிரிவு போலீசார் வழக்கு பதிந்து விசாரித்து வருகின்றனர்


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

புதிய வீடியோ