மேலும் செய்திகள்
அரியாங்குப்பத்தில் பா.ஜ., காலண்டர் வழங்கல்
2 hour(s) ago
ஐகோர்ட் நீதிபதி முதல்வருடன் சந்திப்பு
2 hour(s) ago
புதிய அங்கன்வாடி அமைக்க பூமி பூஜை
2 hour(s) ago
காகிதக்கூழ் கைவினைப் பயிற்சி
2 hour(s) ago
காரைக்கால், : காரைக்காலில் லோக்சபா தேர்தலில் வாக்காளர்களுக்கு குக்கர் வழங்கிய என்.ஆர்.,காங்., பிரமுகர்கள் 7பேர் மீது போலீசார் வழக்குப் பதிந்து விசாரித்து வருகினறனர்.லோக்சபா தேர்தலையொட்டி காரைக்கால் நகர் பகுதியில் பறக்கும் படை அதிகாரிகள் சந்திரமோகன் , செந்தில்குமார், கிருஷ்ணவேல் ஆகிய குழுவினர் ரோந்துப்பணியில் ஈடுப்பட்டனர். அப்போது கட்டுப்பாட்டு அறைக்கு வந்த தகவலில் அடிப்படையில் நேற்று முன்தினம் இரவு பறக்குப்படை அதிகாரிகள் கோயில்பத்து அருகில் எம்.ஜி.ஆர்.,நகரில் என்.ஆர்.,காங்., பிரமுகர்கள் வீடு வீடாக குக்கர் பரிசு பொருட்கள் வழங்குவதை அறிந்து அங்கு சென்றனர்.பறக்குப்படை அதிகாரிகள் வருவதை அறிந்த என்.ஆர்.காங்., பிரமுகர்கள் குக்கரை போட்டுவிட்டு தப்பி சென்றனர். பின் அதிகாரிகள் நடத்திய விசாரணையில் அமைச்சரின் உதவியாளர் ராஜ்குமார் மற்றும் கார்த்தி, சபரி, ராஜீவ்காந்தி, பிரபாகரன், ஆண்ட்ரஸ் ஆகியோர் பரிசுபொருட்கள் வழங்கியது தெரியவந்தது.புகாரின் பேரில் நகர போலீசார் பரிசு பொருட்கள் வழங்க பயன்படுத்திய வாகனத்தை ஓட்டிய கல்லறைபேட் பகுதியை சேர்ந்த அசோக் மற்றும் என்.ஆர்.,காங்., பிரமுகர்கள் உட்பட 7 நபர்கள் மீது வழக்குப் பதிந்து விசாரித்து வருகின்றனர்.போலீசார் மூன்று 5 லிட்டர் குக்கர்கள் மற்றும் மினி சரக்கு வாகனத்தை பறிமுதல் செய்தனர்.
2 hour(s) ago
2 hour(s) ago
2 hour(s) ago
2 hour(s) ago