| ADDED : ஆக 16, 2024 10:59 PM
வில்லியனுார்: ஏலச்சீட்டு நடத்தி பா.ஜ., பிரமுகரிடம் ரூ.2.50 கோடி மோசடி செய்த பைனான்சியர் குடும்பத்தினர் மீது போலீசார் வழக்கு பதிவு செய்துள்ளனர்.கூனிச்சம்பட்டு கிராமத்தை சேர்ந்தவர் சீனிவாசமூர்த்தி; பா.ஜ., பிரமுகர். இவர் அரும்பார்த்தபுரம் டீச்சர்ஸ் காலனியில் வசிக்கிறார். எல்லைப்பிள்ளைச்சாவடி பகுதியில் வசித்தபோது, தந்தைபெரியார் நகர் பைனான்சியர் கணேசன், அவரது மனைவி ஹேமா, மகன் கிருஷ்ணமூரத்தி ஆகியோரிடம் கடத்த 2020ம் ஆண்டு முதல் ஏலச் சீட்டில் சேர்ந்து பணம் கட்டி வந்தார். சீட்டு எடுத்த சீனிவாசமூர்த்திக்கு சேரவேண்டிய ரூ. 1:50 கோடி பணத்தை கணேசன் கொடுக்கவில்லை. இதற்கிடையே சீனிவாசமூர்த்தி மனைவியிடம் மற்றொரு ஏலச்சீட்டு ஒரு கோடி கட்டியுள்ளார். இந்த சீட்டு பணமும் கொடுக்காமல் காலம் கடத்தி வந்தனர்.இதனால் சீனிவாசமூர்த்தி, புதுச்சேரி கோர்ட்டில் வழக்கு தொடர்ந்தார். கோர்ட் உத்தரவின் பேரில், பைனான்சியர் கணேசன் உள்ளிட்ட அவரது குடும்பத்தினர் மூவர் மீது வில்லியனுார் போலீசார் வழக்குப் பதிவு செய்துள்ளனர்.