உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / புதுச்சேரி / கடை உரிமையாளர்கள் மீது வழக்கு

கடை உரிமையாளர்கள் மீது வழக்கு

பாகூர் : போக்குவரத்திற்கு இடையூறாக விளம்பர பலகை வைத்த கடை உரிமையாளர்கள் மீது போலீசார் வழக்குப் பதிந்தனர்.புதுச்சேரி - கடலுார் சாலையில் போக்குவரத்து இடையூராக சாலைகளை ஆக்கிரமித்து பேனர்கள், விளம்பர பலகைகள் வைக்கப்பட்டு இருப்பதால் வாகன ஓட்டிகள் விபத்தில் சிக்கி வருகின்றனர்.அதனை தடுக்கும் வகையில், போக்குவரத்து போலீசார் பல்வேறு நடவடிக்கை மேற்கொண்டு வருகின்றனர். அதன் ஒரு பகுதியாக, அரியாங்குப்பம் மார்க்கெட் சந்திப்பு அருகே போக்குவரத்திற்கு இடையூறாக சாலையில் வைக்கப்பட்டிருந்த விளம்பர பலகைகளை, கிருமாம்பாக்கம் தெற்கு போக்குவரத்து போலீசார் நேற்று பறிமுதல் செய்தனர். இது தொடர்பாக, கடைகளின் உரிமையாளர்கள் மீது வழக்குப் பதிந்தனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

புதிய வீடியோ