உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / புதுச்சேரி / வங்கி ஊழியரை தாக்கிய 2 பேர் மீது வழக்குப் பதிவு

வங்கி ஊழியரை தாக்கிய 2 பேர் மீது வழக்குப் பதிவு

திருக்கனுார் : கே.ஆர்.பாளையத்தில் தனியார் வங்கி ஊழியரை தாக்கிய 2 பேர் மீது போலீசார் வழக்குப் பதிந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.திருக்கனுார் அடுத்த கே.ஆர்.பாளையம் எல்லையம்மன் கோவில் தெருவை சேர்ந்தவர் ஜெயச்சந்திரன், 44; தனியார் வங்கி ஊழியர். இவர் தனது மகன்கள் காதணி விழாவை முடித்துக் கொண்டு, கடந்த 21ம் தேதி இரவு வீட்டிற்கு வந்து கொண்டிருந்ததார்.அப்போது, சாலையோரம் நின்றிருந்த அதே கிராமத்தைச் சேர்ந்த நவீன், 25, அவரது நண்பர் அஜித் ஆகியோர் முன்விரோதம் காரணமாக ஜெயச்சந்திரனைப் பார்த்து திட்டி உள்ளனர். இதனை ஜெயச்சந்திரன் கண்டித்தபோது, கோபமடைந்த இருவரும், ஜெயச்சந்திரனை தாக்கினர். காயமடைந்த ஜெயச்சந்திரன், அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று திருக்கனுார் போலீசில் புகார் அளித்தார். அதன்பேரில், நவீன், அஜித் ஆகியோர் மீது போலீசார் வழக்குப் பதிந்து விசாரித்து வருகின்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்





முக்கிய வீடியோ