உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / புதுச்சேரி / கண்டக்டரை தாக்கிய : 3 பேர் மீது வழக்கு பதிவு

கண்டக்டரை தாக்கிய : 3 பேர் மீது வழக்கு பதிவு

அரியாங்குப்பம் : பஸ் கண்டக்டரை தாக்கிய செக்கர் உள்ளிட்ட 3 பேர் மீது வழக்கு பதிந்து விசாரித்து வருகின்றனர். புதுச்சேரி கடலுார் செல்லும், எஸ்.எஸ்.ஆர்., தனியார் பஸ் கடலுாரில் இருந்து புறப்பட்டு தவளக்குப்பம் அருகே சென்று கொண்டிருந்தது. மற்றோரு என்.எஸ்.ஜே., தனியார் பஸ் செக்கர் கர்ணா, கண்டக்டர் சுந்தர்ராஜன் டிரைவர் கவாஸ்கர் ஆகியோர், நேற்று முன்தினம் எஸ்.எஸ்.ஆர். பஸ்சை நிறுத்தி, பஸ்சின் கண்டக்டர் பாலாஜியிடம் டிக்கெட் கேட்டு தாக்கினர். அதில், காயமடைந்த, அவர், மருத்துவமனையில் சிகிச்சை பெற்றார். பாலாஜி புகாரின் பேரில், தவளக்குப்பம் போலீசார் வழக்குப் பதிந்து, செக்கர் கர்ணா உட்பட 3 பேர் மீது வழக்குப் பதிந்து விசாரித்து வருகின்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை