உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / புதுச்சேரி / குழந்தைகள் உயிரிழப்பை தடுக்க தேசிய இயக்கம் முதல்வர் ரங்கசாமி துவக்கி வைப்பு 

குழந்தைகள் உயிரிழப்பை தடுக்க தேசிய இயக்கம் முதல்வர் ரங்கசாமி துவக்கி வைப்பு 

புதுச்சேரி: புதுச்சேரியில் குழந்தைகளுக்கான வயிற்றுபோக்கை நிறுத்துவதற்கான தேசிய இயக்கத்தை முதல்வர் ரங்கசாமி துவக்கி வைத்தார்.வயிற்றுப்போக்கு காரணமாக ஏற்படும் குழந்தைகள் உயிரிழப்பு முற்றிலும் தடுக்கும் வகையில் குழந்தைகளின் வயிற்றுப்போக்கை நிறுத்துவதற்கான தேசிய இயக்கத்தை மத்திய அரசு உருவாக்கி உள்ளது. சுகாதாரத்துறை சார்பில் இதன் துவக்க விழா, கதிர்காமம் அரசு மருத்துவ கல்லுாரி வளாகத்தில் நடந்தது.முதல்வர் ரங்கசாமி கலந்து கொண்டு, குழந்தைகளுக்கு வயிற்றுபோக்கு நிறுத்துவதற்கான தேசிய இயக்கத்தை துவக்கி வைத்து, வயிற்று போக்கு காலத்தில், உடலில் நீர்சத்து குறைபாட்டை போக்குவதிற்கான ஓ.ஆர்.எஸ்., கரைசல் மற்றும் துத்தநாக மாத்திரைகள் (சிங்க்) குழந்தைகளுக்கு வழங்கினார். தொடர்ந்து, இயக்கத்திற்கான விழிப்புணர்வு சுவரொட்டிகள் வெளியிட்டு கையெழுத்து இயக்கம் மற்றும் 'செல்பி பாயிண்ட்' ஆகியவற்றை துவக்கி வைத்தார். நிகழ்ச்சியில் ரமேஷ் எம்.எல்.ஏ., சுகாதாரத்துறை செயலர் ராஜூ, சுகாதாரத்துறை இயக்குநர் ஸ்ரீராமலு உட்பட பலர் கலந்து கொண்டனர். நேற்றுமுதல் வரும் ஆக., 31ம் தேதி வரை 2 மாதங்களுக்கு செயல்படும் இத்திட்டத்தின் கீழ், புதுச்சேரியில் 5 வயதிற்கு உட்பட்ட அனைத்து குழந்தைகளின் வீடுகளுக்கும் 2 ஓ.ஆர்.எஸ்., பவுடர் பாக்கெட், 14 துத்தநாக மாத்திரைகள் விநியோகிக்கப்பட உள்ளது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்









சமீபத்திய செய்தி