உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / புதுச்சேரி / சித்தலம்பட்டு மார்க்கெட் வீதி சாலை சேதம்

சித்தலம்பட்டு மார்க்கெட் வீதி சாலை சேதம்

புதுச்சேரி சித்தலம்பட்டு மார்க்கெட் வீதி சாலை சேதமடைந்துள்ளதால், வாகன ஓட்டிகள் அவதிக்குள்ளாகி வருகின்றனர்.திருக்கனுார் பஜார் வீதியில் இருந்து சித்தலம்பட்டு மார்க்கெட் வீதி வழியாக செட்டிப்பட்டு, கொடுக்கூர், திருவக்கரை உள்ளிட்ட கிராமங்களுக்கு தினமும் 100க்கும் மேற்பட்டோர் சென்று வருகின்றனர். இச்சாலை, சித்தலம்பட்டு அரசு பள்ளி மாணவர்கள் விடுதிக்கு செல்லும் முக்கிய சாலையாகவும் திகழ்கிறது.இந்நிலையில், இச்சாலை போதிய பராமரிப்பு இல்லாததால் தற்போது மிகவும் சேதமடைந்து, குண்டும் குழியுமாக போக்குவரத்திற்கு பயன்படுத்த முடியாத நிலைக்கு மாறியுள்ளது.இதற்கிடையே, திருக்கனுாரில் உள்ள இறைச்சி கடைகளில் இருந்து வெளியேற்றப்படும் கழிவுகள் இச்சாலையோரங்களில் கொட்டப்படுவதால், சுகாதார சீர்கேடு ஏற்பட்டு வருகிறது.எனவே, சேதமடைந்துள்ள சித்தலம்பட்டு மார்க்கெட் வீதி சாலையை சீரமைக்கவும், இறைச்சி கழிவுகள் கொட்டுவதை தடுக்க நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்



அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை