உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / புதுச்சேரி / ஒதியம்பட்டு குளூனி பள்ளி 100 சதவீதம் தேர்ச்சி

ஒதியம்பட்டு குளூனி பள்ளி 100 சதவீதம் தேர்ச்சி

வில்லியனுார்: ஒதியம்பட்டு புனித சூசையப்பர் குளூனி சி.பி.எஸ்.இ., பள்ளி முதன் முறையாக பிளஸ் 2 தேர்வு எழுதி, 100 சதவீதம் தேர்ச்சி பெற்று சாதனை படைத்துள்ளது.வில்லியனுார் அடுத்த ஒதியம்பட்டில் உள்ள புனித சூசையப்பர் குளூனி சி.பி.எஸ்.இ., பள்ளி சார்பில் 40 மாணவியர் முதன் முறையாக பிளஸ் 2 தேர்வு எழுதினர். அனைவரும் தேர்ச்சி பெற்று சாதனை படைத்துள்ளனர்.மாணவி ஹர்சினி 477 மதிப்பெண்கள் பெற்று பள்ளியில் முதலிடம் பிடித்தார். மாணவி விஷ்ணுபிரியா 473 மதிப்பெண்கள் பெற்று இரண்டாம் இடம், மாணவி ஸ்ரீவர்த்தினி 465 மதிப்பெண்கள் பெற்று மூன்றாம் இடம், மாணவிகள் மோனிஷா, சந்தியா ஆகியோர் 462 மதிப்பெண்கள் பெற்று நான்காம் இடம் பிடித்தனர். ஒன்பது பேர் 90 சதவீதத்திற்கு மேலும், 21 பேர் 80 சதவீதத்திற்கு மேலும், 10 பேர் 70 சதவீதத்திற்கு மேலும் மதிப்பெண்கள் பெற்றுள்ளனர். அவர்களை பள்ளி தாளாளர் எமிலியானா, பள்ளி முதல்வர் ஜெய்ஸ்ஜான் ஆகியோர் நினைவு பரிசுகள் வழங்கி, பாராட்டினர். நிகழ்ச்சியில் மாணவர்கள், பெற்றோர்கள், ஆசிரியர்கள், ஊழியர்கள் பங்கேற்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்









புதிய வீடியோ