உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / புதுச்சேரி / சர்வதேச இளைஞர் மாநாட்டில் பங்கேற்பவர்களுக்கு முதல்வர் வாழ்த்து

சர்வதேச இளைஞர் மாநாட்டில் பங்கேற்பவர்களுக்கு முதல்வர் வாழ்த்து

புதுச்சேரி: சிக்கிம் சர்வதேச இளைஞர் மாநாட்டில் பங்கேற்கும் புதுச்சேரி இளைஞர்கள் முதல்வர் ரங்கசாமியை சந்தித்து வாழ்த்து பெற்றனர்.சிக்கிம் மாநில அரசின் சுற்றுலா துறை, யாங்காங் சுற்றுலா வளர்ச்சிக் கழகம் சார்பில் சர்வதேச அளவிலான இளைஞர் மாநாடு வரும் ஏப்., 11ம் தேதி துவங்கி 14ம் தேதி வரை நடக்கிறது.இந்த சர்வதேச இளைஞர் மாநாட்டில் 28 மாநிலங்களை சேர்ந்த இளைஞர்கள், இரண்டு யூனியன் பிரதேசங்கள் உள்ளிட்ட 10 வெளி நாடுகளை சேர்ந்த 200 இளைஞர்கள், நாடு முழுதும் தேர்ந்தெடுக்கப்பட்டு, பங்கேற்க உள்ளனர்.இந்நிலையில், புதுச்சேரி தேசிய இளைஞர் திட்டத்தின் மாநில தலைவர் ஆதவன் தலைமையில் சிக்கிம் சர்வதேச இளைஞர் மாநாட்டில் பங்கேற்க தேர்வு செய்யப்பட்ட புதுச்சேரி மாநிலத்தை சேர்ந்த இளைஞர்கள் ஜெயப்பிரதா, சிவசங்கரி, கவுசல்யா, பிரியதர்ஷினி, மனோ, ஜெயராஜ், நந்தகோவிந்தன், விக்னேஷ் ஆகியோர் முதல்வர் ரங்கசாமியை சட்டசபையில் சந்தித்து வாழ்த்து பெற்றனர்.இவர்கள், மாநாட்டில் தமிழர்களின் பாரம்பரிய கலைகளான சிலம்பம், புலியாட்டம், மான் கொம்பு, பரதநாட்டியம், சுருள் கத்தி, நாட்டுப்புறப் பாடல் ஆகிய கலை நிகழ்ச்சிகளை நடத்தஉள்ளனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

முக்கிய வீடியோ