உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / புதுச்சேரி / ஊர்காவல்படை வீரர் பணிக்கான சான்றிதழ் சரிபார்ப்பு பணி துவக்கம்

ஊர்காவல்படை வீரர் பணிக்கான சான்றிதழ் சரிபார்ப்பு பணி துவக்கம்

புதுச்சேரி, : ஊர்காவல்படை வீரர் பணிக்கான சான்றிதழ் சரிபார்ப்பு பணி நேற்று துவங்கியது.புதுச்சேரி போலீசில் காலியாக உள்ள 420 ஆண்கள், 80 பெண் ஊர்காவல்படை வீரர்கள் தேர்வு செய்ய விண்ணப்பம் பெறப்பட்டு, கடந்த பிப். மாதம் உடற்தகுதி தேர்வு நடந்தது. ஆண்கள் 3034 பேரும், பெண்கள் 1195 பேர் என மொத்தம் 4229 பேர் தகுதி பெற்றனர்.இவர்களுக்கான எழுத்து தேர்வு கடந்த 30ம் தேதி நடத்தப்பட்டு, மறுநாளே தேர்வு முடிவுகள் வெளியானது. தேர்வில் வெற்றி பெற்று, பணிக்கு தேர்வான ஊர்காவல்படை வீரர்களுக்கு சான்றிதழ் சரிபார்ப்பு நேற்று துவங்கியது. கோரிமேடு போலீஸ் பயிற்சி பள்ளி வளாகத்தில் நடந்த சான்றிதழ் சரிபார்ப்பிற்கு 107 பேர் அழைக்கப்பட்டனர். அதில், 106 பேர் ஆஜராகினர்.போலீஸ் துறை சிறப்பு அலுவலர் ஏழுமலை தலைமையில் அதிகாரிகள் சான்றிதழ் சரிபார்ப்பில் ஈடுப்பட்டனர். 99 பேர் தங்களின் பிறப்பு, கல்வி மற்றும் குடியிருப்பு சான்றிதழ்களை சமர்பித்தனர். ஒருவர் நேரில் வரவில்லை. மீதமுள்ள 7 பேர் குடியிருப்பு சான்றிதழ் பெற தாமதம் ஏற்படுவதால், சான்றிதழ் சமர்ப்பிக்க கால அவகாசம் கேட்டு சென்றனர். நேற்று சான்றிதழ் சரிபார்க்கப்பட்ட 99 பேருக்கும் இன்று மருத்துவ பரிசோதனை நடக்கவுள்ளது. சான்றிதழ் சரிபார்ப்பு வரும் 11ம் தேதி வரை நடக்கிறது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்









முக்கிய வீடியோ