உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / புதுச்சேரி / வரிபாக்கி உடனே செலுத்த ஆணையர் அறிவுறுத்தல்

வரிபாக்கி உடனே செலுத்த ஆணையர் அறிவுறுத்தல்

நெட்டப்பாக்கம்: நெட்டப்பாக்கம், கொம்யூன் பஞ்சாயத்தில் குடிநீர், வீடு மற்றும் தொழில் வரி செலுத்தாதவர்கள் உடனே செலுத்திட ஆணையர் ரமேஷ் அறிவுறுத்தியுள்ளார்.அவர் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பு:நெட்டப்பாக்கம் கொம்யூன் பஞ்சாயத்திற்குட்பட்ட கிராமங்களின் பொதுமக்கள் செலுத்த வேண்டிய குடிநீர், வீடு, தொழில் வரி மற்றும் தொழிற்சாலை, வணிக உரிமம் கட்டணங்களை இன்று (30ம் தேதி) முதல் 15 தினங்களுக்குள் கொம்யூன் அலுவலக வருவாய் பிரிவில் செலுத்தி ரசீது பெற்றுக் கொள்ள வேண்டும்.அதிகப்படியான வரி பாக்கி செலுத்தாத நபர்கள் பற்றிய விவரப் பட்டியல் தயார் செய்து, பொது இடத்தில் மக்கள் பார்வைக்கு வெளியிடப்படும். வரி செலுத்தாத நபர்கள் மீது கொம்யூன் பஞ்சாயத்து சட்டத்தின் கீழ் ஜப்தி நடவடிக்கை எடுக்கப்படும்.வரி பாக்கி வைத்துள்ள நபர்களின் குடிநீர் இணைப்பு மற்றும் அனுமதி இல்லாமல் எடுக்கப்பட்ட இணைப்புகளும் துண்டிக்கப்படும். துண்டிப்பு செய்யப்பட்ட இணைப்புகள் அலுவலக உத்தரவு இன்றி எடுத்துள்ளதாக, ஆய்வில் தெரிய வந்தால் போலீஸ் நடவடிக்கை எடுக்கப்படும். மேலும், விவரங்களுக்கு நெட்டப்பாக்கம் கொம்யூன் பஞ்சாயத்து வருவாய் பிரிவில் நேரில் வந்து தெரிந்து கொள்ளலாம்.இவ்வாறு அதில், கூறப்பட்டுள்ளது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்



முக்கிய வீடியோ