புகார் பெட்டி
: தெரு நாய்கள் தொல்லை: பாண்டி மெரினா கடற்கரை பகுதியில் தெரு நாய்கள் தொல்லை அதிகமாக இருப்பதால் சுற்றுலா பயணிகள் அச்சமடைந்து வருகின்றனர். கவிதா, புதுச்சேரி. –––––––––––––––––––––––––––––––––––––––––––– சாலை படுமோசம்: லாஸ்பேட்டை ராஜாஜி நகர் மெயின் ரோடு, குண்டும், குழியுமாக உள்ளதால் வாகன ஓட்டிகள் அவதியடைந்து வருகின்றனர். ராஜன், லாஸ்பேட்டை. ––––––––––––––––––––––––––––––––––––––––––––––––––––– வாகனங்கள் நிறுத்துவதால் இடையூறு: அரும்பார்த்தபுரம் பைபாஸ் சாலை பாலத்தின் கீழே கனரக வாகனங்களை நிறுத்துவதால் போக்குவரத்து இடையூறு ஏற்பட்டு வருகிறது. கண்ணன், அரும்பார்த்தபுரம். ––––––––––––––––––––––––––––––––––––– ஏர் ஹாரனால் மக்களுக்கு பாதிப்பு: தனியார் பஸ்களில் ஏர் ஹாரன் அதிக சத்தத்துடன் பயன்படுத்துவதால் இரு சக்கர வாகனத்தில் செல்லும் மக்களுக்கு மனஉளைச்சல் ஏற்படுகிறது. பாபு, புதுச்சேரி. ––––––––––––––––––––––––––––––––––––––– குண்டும்: காமராஜ் சாலை குண்டும், குழியுமாக உள்ளதால் வாகன ஓட்டிகள் அவதியடைந்து வருகின்றனர். கலைச்செல்வன், புதுச்சேரி.