உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / புதுச்சேரி / பருவ மழையை எதிர் கொள்வது குறித்து கலெக்டர் தலைமையில் ஆலோசனை

பருவ மழையை எதிர் கொள்வது குறித்து கலெக்டர் தலைமையில் ஆலோசனை

புதுச்சேரி: மாவட்ட பேரிடர் மேலாண்மை ஆணையம் சார்பில், கலெக்டர் அலுவலகத்தில், ஆலோசனை கூட்டம் நடந்தது. கலெக்டர் குலோத்துங்கன் தலைமை தாங்கினார். கூட்டத்தில் வருவாய் துறை, உள்ளாட்சித் துறை, தீயணைப்பு துறை, வனம், சுகாதாரம், மின்சாரம், குடிமை பொருள் வழங்கல் துறை, பள்ளி கல்வித்துறை, மகளிர் மற்றும் குழந்தைகள் மேம்பாடு, சமூக நலம், மீன்வளம், காவல் துறை, கடலோர காவல்படை, போக்குவரத்துத்துறை, தொழில்துறை ஆகிய துறை அதிகாரிகள் கலந்து கொண்டனர்.கலெக்டர் குலோத்துங்கன், மாகே, ஏனாம் ஆகிய பகுதிகளில், பெய்து வரும் தென்மேற்கு பருவ மழையை எதிர் கொள்வதற்காக மேற்கொள்ளப்பட்ட நடவடிக்கை குறித்து அதிகாரிகளிடம் கேட்டறிந்தார். வரும் வடக்கு கிழக்கு பருவ மழை தொடங்குவதற்கு முன், வெள்ள தடுப்பு கட்டுமான பணிகளை முடிக்குமாறு பொதுப்பணித்துறையினருக்கு அறிவுறுத்தினார். மேலும், மரப்பாலம், இந்திரகாந்தி, சதுக்கம், பாவணர் நகர், அண்ணா நகர் ஆகிய பகுதிகளில் மழைநீர் தேங்குவதை தடுக்க அங்கு சிறு பாலங்கள் அமைக்கப்பட்டுள்ளதால், தண்ணீர் தேங்குவது குறைக்கப்படும். மேலும், கிருஷ்ணா நகர் பகுதிகளில், 14 ராட்சத பம்புகள் மூலம் வெள்ள நீரை வெளியேற்ற ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. நீரின் மூலம் பரவும் நோய், டெங்கு காய்ச்சல் தடுக்க போதுமான மருந்துகள் இருப்பு வைக்க சுகாதாரத்துறைக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது. பள்ளி கட்டடங்களின் உறுதித் தன்மையை குறித்து கல்வித்துறை அதிகாரிகளிடம் கேட்டறிந்தார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்





முக்கிய வீடியோ